கீதை மிகவும் ஆபாசமான, அருவருப்பான புனிதப் நூல்களில் ஒன்று என்று ஜிசெக் விமர்சித்துள்ளார். நாஜி அரசியல்வாதி ஹென்ரிச் ஹிம்லர் பகவத் கீதையை பயன்படுத்தி ஜெர்மனியில் யூதர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதை நியாயப்படுத்தினார்.
பகவத் கீதை இந்து மதத்தின் பழமையான புனித நூலாகக் கருதப்படும் நிலையில், அதைப்பற்றி பல்வேறு விளக்கங்கள் மற்றும் ஆய்வுகள் காலம்தோறும் நடைபெற்று வந்துள்ளது. இந்நிலையில். புகழ்பெற்ற ஸ்லோவேனிய தத்துவவியலாளரும் எழுத்தாளருமான ஸ்லாவோஜ் ஜிசெக் கீதை பற்றி சர்ச்சைக்குரிய கருத்தை முன்வைத்துள்ளார்.
YearOfTheKraken என்ற ட்விட்டர் பக்கத்தில் வெளியாகியுள்ள பதிவ ஒன்றில் ஜிசெக் கீதையைப் பற்றிப் பேச்சின் வீடியோ இடம்பெற்றுள்ளது. அதில் ஜிசெக், கீதை மிகவும் ஆபாசமான, அருவருப்பான புனிதப் நூல்களில் ஒன்று என்று விமர்சித்துள்ளார். நாஜி அரசியல்வாதி ஹென்ரிச் ஹிம்லர் பகவத் கீதையை பயன்படுத்தி ஜெர்மனியில் யூதர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதை நியாயப்படுத்தினார்.
ஹமாஸ் சுரங்கப் பாதைகளைக் குறிவைத்து காசாவைச் சுற்றி வளைத்த இஸ்ரேல்!
700 ஸ்லோகங்களைக் கொண்ட பகவத் கீதை, அதன் தத்துவ ஆழம் மற்றும் ஆன்மிக போதனைகளுக்காகப் போற்றப்படுகிறது. இந்நூல் இளவரசரான அர்ஜுனனுக்கும் கிருஷ்ணருக்கும் இடையேயான உரையாடலாக அமைந்தது. தனது தேரோட்டியாக பணியாற்றிய கிருஷ்ண பவகான் அர்ஜுனனின் கடமை, நீதி மற்றும் வாழ்க்கை இயல்புகளைப் போதிக்கிறார்.
Slavoj Žižek, the most prominent communist philosopher in the world currently, calls Bhagavad Gita "one of the most obscene disgusting sacred books" and blames Bhagavad Gita for Nazi Heinrich Himmler allegedly using it to justify genocide of Jews pic.twitter.com/9lrIzJXetZ
— Sensei Kraken Zero (@YearOfTheKraken)பிரபலமான "ஓப்பன்ஹைமர்" திரைப்படத்தில் வரும் கதாபாத்திரங்கள் பகவத் கீதையைப் படிக்கும்போது பாலுறவில் ஈடுபடும் காட்சியையும் ஜிசெக் விமர்சனம் செய்துள்ளார். "ஓபன் ஹெய்மர் ஒரு நல்ல படம்" என்று பாராட்டியிருக்கும் அவர், "ஆனால் நான் பகவத் கீதையின் ஆன்மீக பகுதியை வெறுக்கிறேன்" என்றும் வீடியோவில் கூறுகிறார்.
"ஓப்பன்ஹைமர் திரைப்படம் இந்தியாவில் சர்ச்சையை ஏற்படுத்தியது உங்களுக்கு நினைவிருக்கும். ஏன் என்று உங்களுக்குத் தெரியும். ஃப்ளோரன்ஸ் பக் - ஓபன்ஹைமர் இருவரும் முதல் முறையாக உறவு கொள்ளும்போது, அவள் பகவத் கீதையைப் படிக்கும்படி கேட்கிறாள். இது இந்தியர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது" என அவர் பேசியுள்ளார்.
"நான் இந்தியர்களுடன் உடன்படுகிறேன், ஆனால் நேர்மாறான அர்த்தத்தில்" என்று கூறிய அவர், கீதை மிகவும் ஆபாசமான, அருவருப்பான புனித நூல் என்று விமர்சித்துள்ளார்.
அது செக்ஸ் கல்வி... தப்பா எடுத்துக்க கூடாது: நிதிஷ் குமாருக்கு முட்டுக்கொடுக்கும் தேஜஸ்வி யாதவ்