அது செக்ஸ் கல்வி... தப்பா எடுத்துக்க கூடாது: நிதிஷ் குமாருக்கு முட்டுக்கொடுக்கும் தேஜஸ்வி யாதவ்

பள்ளிகளில் கற்பிக்கப்படும் பாலியல் கல்வியைப் பற்றி முதல்வர் நிதிஷ் குமார் பேசியவதாகதுணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.

It Is Sex Education: Tejashwi Yadav Defends Boss Bizzare Remark sgb

பீகார் முதல்வர் நிதிஷ் குமார் மக்கள் தொகைக் கட்டுப்பாட்டில் பெண் கல்வியின் பங்கு குறித்துப் பேசியது சர்ச்சையைக் கிளப்பிருக்கிறது. அவரது கருத்துக்கு ஆதரவாக விளக்கம் கொடுத்திருக்கும் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், பள்ளிகளில் கற்பிக்கப்படும் பாலியல் கல்வியைப் பற்றி முதல்வர் பேசியவதாகவும், அவரது கருத்துகளை தவறாகப் புரிந்துகொள்ளக் கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.

முதல்வர் நிதிஷ் குமார் பீகாரில் கருவுறுதல் விகிதம் 4.2ல் இருந்து 2.9 சதவீதமாக ஏன் குறைந்துள்ளது என்பதை விளக்கி மாநில சட்டப்பேரவையில் பேசியபோது இந்தக் கருத்தைத் தெரிவித்தார். அவரது இந்தச் சர்ச்சைக்குரிய பேச்சு கொச்சையானது என்றும் இழிவான வார்த்தைகளைப் பயன்படுத்தி இருக்கிறார் என்றும் பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.

இதற்கு விளக்கம் கொடுத்து செய்தியாளர்களிடம் பேசிய துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், "நான் ஒன்றை தெளிவுபடுத்துகிறேன். முதல்வர் பாலியல் கல்வி பற்றிச் சொன்னார். மக்கள் அதைப்பற்றிப் எதையும் பேசுவதற்குத் தயங்குகிறார்கள். ஆனால் பள்ளிகளில் அறிவியல், உயிரியல் பாடங்களில் இதைத்தான் குழந்தைகள் கற்றுக்கொள்கிறார்கள்" என்று தெரிவித்தார்.

பாஜக ஆட்சிக்கு வந்ததும் ஶ்ரீரங்கத்தில் பெரியார் சிலையை அகற்றுவோம்: அண்ணாமலை பேச்சு

It Is Sex Education: Tejashwi Yadav Defends Boss Bizzare Remark sgb

"மக்கள்தொகையைக் கட்டுப்படுத்த நடைமுறையில் என்ன செய்ய வேண்டும் என்று அவர் கூறினார். அதைத் தவறான முறையில் எடுத்துக்கொள்ளக் கூடாது. பாலியல் கல்வி பற்றிப் பேசியிருக்கிறார் என்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டும்" எனவும் துணை முதல்வர் தேஜாஸ்வி யாதவ் கூறினார்.

நிதிஷ் குமாரின் பேச்சை கடுமையாக விமர்சித்துள்ள பாஜக, அவரை அரசியலில் மிக மோசமானத் தலைவர் என்று சாடியுள்ளது.

"இந்திய அரசியலில் இதுவரை நிதீஷ் அவர்களைப் போல ஒரு தலைவரைப் பார்க்க முடியாது. ஆபாசப் படங்களால் அவரது மனம் புழுத்துப் போயிருக்கிறது. அவரது இரட்டை அர்த்தக் கருத்துகளைத் தடைசெய்ய வேண்டும்" என்று பாஜக விமர்சித்துள்ளது.

தீபாவளி பரிசு! தமிழகத்திற்கு ரூ.2,976 கோடி வரி பகிர்வு நிதி முன்கூட்டியே விடுவிப்பு!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios