வங்கதேசத்தில் இரண்டு ரயில்கள் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்ட விபத்தில் குறைந்தது 15 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
வங்கதேசத்தில் இரண்டு ரயில்கள் மோதிக் கொண்ட விபத்தில் சிக்கி 15 பேர் உயிரிழந்துள்ளனர். 100க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அன்சப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தலைநகர் டாக்காவின் வடகிழக்கில் 60 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அந்நாட்டின் பைரப் நகரில் இந்த விபத்து நடந்துள்ளது. சரக்கு ரயில் எதிர்திசையில் வந்த பயணிகள் ரயிலின் மீது மோதியதில், இரண்டு பயணிகள் பெட்டிகள் தடம் புரண்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
“நாங்கள் 15 உடல்களை மீட்டுள்ளோம், பலர் காயமடைந்துள்ளனர்.” என்று பைரப்பில் உள்ள அரசு அதிகாரி சாதிகுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார். இறந்தவர்களின் எண்ணிக்கை உயரக் கூடும் எனவும் அவர் அச்சம் தெரிவித்துள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மீட்பு படையினர் தொடர்ந்து மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கவிழ்ந்த பெட்டிகளுக்கு அடியில் சில உடல்கள் சிக்கியிருப்பதாக மீட்பு படையினர் தெரிவித்துள்ளனர் எனவும் சாதிகுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார். இந்த விபத்தில் சிக்கி சுமார் 100க்கும் மேற்பட்டவர்கள் காயடமடைந்துள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மாலை 4:00 மணியளவில் நடந்த இந்த விபத்தானது, ஒரு ரயில் மற்றொரு ரயில் வரும் பாதையில் நுழந்ததால் ஏற்பட்டதாகவும் சாதிகுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
லக்ஷர் இ தொய்பா தளபதி ஹஷிம் அலி அக்ரம் காசாவில் சுட்டுக் கொலை!
ரயில் விபத்துக்கள் வங்கதேசத்தில் பொதுவானவை. அடிக்கடி அந்நாட்டில் ரயில் விபத்துகள் நடக்கின்றன. அத்தகைய விபத்துகள் பெரும்பாலும் மோசமான சிக்னல், அலட்சியம், பழைய தடங்கள், மோசமான உள்கட்டமைப்பு ஆகியவற்றால் ஏற்படுகின்றன.