நியூயார்க்.. சீக்கியர்கள் மீது நடக்கும் தொடர் தாக்குதல்.. 66 வயது சீக்கியர் மரணம் - 30 வயது இளைஞர் கைது!

By Ansgar R  |  First Published Oct 23, 2023, 5:26 PM IST

நியூயார்க் நகரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தலைப்பாகை அணிந்து நகர பேருந்தில் சென்ற ஒரு சிக்கிய இளைஞர், அமெரிக்கா இளைஞர் ஒருவரால் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் அந்த அதிர்வே இன்னும் இன்னும் நீங்காத நிலையில், நியூயார்க் நகரில் மற்றொரு சம்பவம் நடந்துள்ளது.


கடந்த சில வாரங்களாக நியூயார்க் நகரில் சீக்கியர்கள் மீது கொடூர தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றது, சென்ற வாரம் 19 வயது சீக்கியர் தாக்கப்பட்ட நிலையில், அதே வாரத்தில் மற்றொரு 66 வயது சீக்கியரும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார். கடந்த வாரம் நியூயார்க்கில் சீக்கியர் ஒருவர் அவரது வாகனத்தின் மீது மற்றொரு கார் மோதியதில், அதில் ஏற்பட்ட தகராறில் 30 வயது நபர் ஒருவர், அந்த 66 வயது சீக்கியரை தலையில் தாக்கியுள்ளார். 

கடந்த வியாழன் அன்று திரு. சிங் மற்றும் கில்பர்ட் அகஸ்டின் என்ற இருவரின் வாகனங்கள் மோதியதாகவும், இரு கார்களிலும் கீறல்கள் சில ஏற்பட்டதாகவும் நியூ யுவர் டெய்லி நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இதனை அடுத்து திரு. சிங் 911 ஐ அழைக்க முயன்றபோது, ​காரை விட்டு வெளியே வந்த அந்த கில்பர்ட் அகஸ்டின் என்ற அந்த நபர் "நோ போலீஸ், நோ போலீஸ்" என்று கூறி திரு. சிங்கின் தொலைபேசியை பறித்துள்ளார். 

Tap to resize

Latest Videos

குறி தவறி தாக்குதல்... காசாவுக்குப் பதில் எகிப்து பகுதியில் விழுந்த குண்டு... இஸ்ரேல் ராணுவம் விளக்கம்

இறுதியில் இரண்டு பேரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, திரு. சிங் அகஸ்டினிடம் இருந்து தொலைபேசியை எடுத்துக்கொண்டு தனது காருக்கு திரும்பிச் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத நேரத்தில், அவர் தலையிலும் முகத்திலும் மூன்று முறை குத்தியுள்ளார் அகஸ்டின். இதில் நிலைகுலைந்த ஜஸ்மர் சிங், தரையில் சுருண்டு விழுந்துள்ளார். ஜஸ்மர் சிங் ஆபத்தான நிலையில் உள்ளூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், ஆனால் அவருக்கு மூளையில் காயம் ஏற்பட்டதால் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார். 

Jasmer Singh loved his city and deserved so much more than his tragic death. On behalf of all New Yorkers, I want our Sikh community to know you have more than our condolences. You have our sacred vow that we reject the hatred that took this innocent life and we will protect you. pic.twitter.com/JvhhmDJ9v2

— Mayor Eric Adams (@NYCMayor)

நியூயார்க் நகர மேயர் எரிக் ஆடம்ஸ் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். "ஜஸ்மர் சிங் தான் வாழ்ந்த நியூயார்க் நகரை நேசித்தவர் என்று அவருக்கு புகழாரம் சூட்டினார். மேலும் அனைத்து நியூயார்க்கர்களின் சார்பாக, ஆழ்ந்த இரங்கல்களை தெரிவிப்பதாக கூறியுள்ளார் அவர். மேலும் அனைத்து மக்களின் பாதுகாப்பை நாங்கள் உறுதி செய்வோம் என்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D 

திரு சிங்கைத் தாக்கிய அந்த அகஸ்டின் என்ற 30 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டு, படுகொலை மற்றும் தாக்குதல் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நியூயார்க்கில் சீக்கிய இளைஞர் ஒருவர் தாக்கப்பட்ட ஒரு வாரத்திற்குள் ஏற்பட்ட திரு. சிங்கின் மரணம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியள்ளது என்றே கூறலாம்.

"நாங்கள் அதை அணிவதில்லை".. தலைப்பாகை அணிந்த சீக்கியர்.. தாக்கிய அமெரிக்கர் - பரபரப்பான New York! என்ன நடந்தது?

click me!