கின்னஸ் சாதனை.. உலகின் மிகவும் வயதான நாயான Bobi.. உடல்நலக்குறைவால் இறந்த சோகம் - அதன் வயது என்ன தெரியுமா?

By Ansgar R  |  First Published Oct 23, 2023, 4:35 PM IST

World Oldest Dog : இந்த உலகில் நாய்கள் தோன்றி 33,000 ஆண்டுகள் ஆகிவிட்டதாக சில ஆய்வுகள் கூறுகின்றது, அதிலும் குறிப்பாக, மனிதர்கள் செல்ல பிராணிகளாக வளர்க்கத்துவங்கியது நாய்களை தான் என்றும் சில ஆய்வுகள் கூறுகின்றது.


ஏராளத்த 13,000 முதல் 30,000 ஆண்டுகளுக்கு முன்பே நாய்களை, மனிதர்கள் தங்கள் வேட்டை விலங்காகவும், செல்லப்பிராணிகளாகவும் வளர்த்து வருகின்றனர். ஆனால் ஒரு நாயின் இயல்பான ஆயுட்காலம் என்பது 12 முதல் 14 வயது வரை மட்டுமே, மேலும் சில சிறிய வகை நாய்கள் 15 ஆண்டுகள் வரை வாழும் என்று கூறுகின்றனர் அறிஞர்கள். 

இந்நிலையில் போர்ச்சுகல் நாட்டை சேர்ந்த Bobi என்ற நாய் உலகின் மிகவம் வயதனாக நாயக இருந்த நிலையில் கடந்த அக்டோபர் 21ம் தேதி அது உடல்நலக்குறைவால் இறந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கின்னஸ் உலக சாதனை பட்டியலில் பெயர் பெற்ற அந்த நாயின் அதிகாரப்பூர்வ வயது 31 ஆண்டுகள் மற்றும் 163 நாட்கள்.

Tap to resize

Latest Videos

குறி தவறி தாக்குதல்... காசாவுக்குப் பதில் எகிப்து பகுதியில் விழுந்த குண்டு... இஸ்ரேல் ராணுவம் விளக்கம்

Purebred Rafeiro do Alentejo என்ற வகையை சேர்ந்த அந்த நாய், சிறு கால்நடைகள் மற்றும் கோழிகளை பாதுகாக்க மனிதர்களாக வளர்க்கப்படும் ஒரு நாய் இனமாகும். பொதுவாக 12 முதல் 15 ஆண்டுகள் வரை மட்டுமே இந்த இன நாய்கள் உயிர்வாழுமாம். ஆனால் Bobi இயல்பை விட இரு மடங்கு அதிக ஆண்டுகள் நல்ல உடல்நலத்தோடு வாழ்ந்து வந்துள்ளது. 

இதற்கு முன்பாக கடந்த 1910ம் ஆண்டு பிறந்து 1939ம் ஆண்டு வரை சுமார் 29 ஆண்டுகள் வாழ்ந்த ஆஸ்திரேலியா நாட்டை சேர்ந்த Bluey என்ற நாய் தான் அதிக காலம் வாழ்ந்த நாயக கருதப்பட்டது. இந்நிலையில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தான் Bobi அந்த சாதனையை முறியடித்து உலகின் வயதான நாயாக மாறியது என்பது குறிப்பிடத்தக்கது. 

போபி தனது வாழ்நாள் முழுவதையும் போர்ச்சுகலில் உள்ள ஒரு கிராமமான கான்கிரோஸில், கோஸ்டா என்ற நபரின் குடும்பத்துடன் தான் வாழ்ந்து வந்தது. கின்னஸ் உலக சாதனைகளின் படி, அவரது உரிமையாளரால் அது ஒரு நேசமான மற்றும் சிறந்த நாய் என்று போற்றப்பட்டுள்ளது. Bobi, அதன் வாழ் நாள் முழுவதும் சுற்றிலும் உள்ள காடுகளிலும், விளைநிலங்களிலும் சங்கிலிகள் அல்லது கயிறு கட்டப்படாமல் சுதந்திரமாக சுற்றிவந்ததாக அதன் உரிமையாளர் கூறினார். 

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D 

பாபியின் நீண்ட ஆயுளின் ரகசியம் அது தான் என்றும் அவர் கூறியுள்ளார். Bobi வாழ்ந்த காலம் முழுவதும் ஒரு அமைதியான சூழலில் வாழ்ந்ததே அது இதனை ஆண்டுகாலம் நலமாக வாழ்ந்ததற்கு காரணம் என்று அவர் கூறியுள்ளார்.

பெண்கள் மீதான பயத்தால் 55 ஆண்டுகள் தனிமையில் வாழ்ந்த வித்தியாசமான மனிதர்..!!

click me!