பங்களாதேஷ் உணவகத் தாக்குதலில் தொடர்புடைய11 தீவிரவாதிகள் சுட்டுக்‍கொலை!

Asianet News Tamil  
Published : Oct 10, 2016, 12:49 AM ISTUpdated : Sep 19, 2018, 02:01 AM IST
பங்களாதேஷ் உணவகத் தாக்குதலில் தொடர்புடைய11 தீவிரவாதிகள் சுட்டுக்‍கொலை!

சுருக்கம்

பங்களாதேஷ் தலைநகர் டாக்கா உணவகத் தாக்குதலில் தொடர்புடைய தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த 11பேர், அந்நாட்டு பாதுகாப்பு படையினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்‍கையின்போது சுட்டுக்கொல்லப்பட்டனர்.

பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் கடந்த ஜூலை மாதம் 1-ம் தேதியன்று  அங்குள்ள உணவகத்திற்குள் தீவிரவாதிகள் அதிரடியாக நுழைந்து நடத்திய கொடூர தாக்குதலில் இந்திய பெண் உட்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 24 பேர் உயிரிழந்தனர்.

இந்த தாக்‍குதல் தொடர்பாக  500-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் விசாரணை  நடத்தப்பட்டு வரும் நிலையில், டாக்கா நகரின் பல்வேறு இடங்களில் பாதுகாப்பு படையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது ஏற்பட்ட மோதலில் 11 தீவிரவாதிகள் சுட்டுக்‍ கொல்லப்பட்டனர். அவர்கள், டாக்‍கா உணவகத் தாக்‍குதலுக்‍கு பொறுப்பேற்றுள்ள Jamaat-ul-Mujahideen தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் என பங்களாதேஷ் போலீசார் தெரிவித்துள்ளனர். 

PREV
click me!

Recommended Stories

நன்றி கெட்ட நட்பு..! ஈரான் போரில் தனித்து விடப்பட்ட அமெரிக்கா..! வெளுத்து வாங்கிய டிரம்ப்..!
Iran US Conflict: அமெரிக்காவின் டீலை நிராகரித்த ஈரான்! இந்த 5 நிபந்தனைகளுக்கு ஓகே சொன்னா தான் அமைதியாம்!