72 மணி நேர போர் நிறுத்தத்திற்கு சூடான் படைகள் ஒப்புதல்.. வெளிநாட்டினர் வெளியேற்றப்படுவதால் நடவடிக்கை..

By Ramya s  |  First Published Apr 25, 2023, 9:42 AM IST

சூடானில் தொடர்  வன்முறைக்கு மத்தியில், அந்நாட்டின் ராணுவம் இன்று முதல் 72 மணி நேர போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளன.


ஆப்பிரிக்க நாடான சூடானில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற நீண்ட காலமாக மோதல் நடைபெற்று வருகிறது. அந்நாட்டில் தற்போது நடைபெற்று வரும் ராணுவ ஆட்சிக்கு எதிராக அதிருப்தி தெரிவித்து வந்த துணை ராணுவ படையினர் தலைநகர் கர்த்தூமில் உள்ள விமான நிலையத்தை கைப்பற்றினர். இதனால் அங்கு ராணுவத்திற்கும் துணை ராணுவத்திற்கும் இடையே மோதல் வலுப்பெற்றுள்ளது. இருதரப்பிரனரும் மாறி மாறி துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டு வருவதால் சூடான் கலவர பூமியாக காட்சியளிக்கிறது.

ஏப்ரல் 15 முதல் ராணுவம் மற்றும் துணை ராணுவத்திற்கு இடையே நடந்த சண்டையில் குறைந்தது 427 பேர் கொல்லப்பட்டனர். மருத்துவமனைகள் மற்றும் பிற சேவைகள் பாதிக்கப்பட்டு குடியிருப்புப் பகுதிகளை போர்ப் பகுதிகளாக மாற்றியுள்ளன. போருக்குப் பயந்து மக்கள் வெவ்வேறு இடங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

Latest Videos

undefined

இதற்கிடையில் சூடான் நாட்டில் ஏற்பட்டுள்ள வன்முறை "ஒரு பேரழிவு அபாயத்தை ஏற்படுத்தும் . அது முழு பிராந்தியத்தையும் அதற்கு அப்பாலும் மூழ்கடிக்கக்கூடும்" என்று ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : குட்நியூஸ்.. மே 5 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு.. எந்த மாவட்டத்திற்கு தெரியுமா?

இந்நிலையில் ராணுவம் மற்றும் துணை ராணுவம் இன்று முதல் 72 மணி நேர போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளன. அமெரிக்காவும் சவூதி அரேபியாவும் போர் நிறுத்தத்திற்கு மத்தியஸ்தம் செய்ததாக சூடான் ராணுவம் தெரிவித்துள்ளது. அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் அந்தோனி பிளிங்கன் போர் நிறுத்த ஒப்பந்தத்தை முதலில் அறிவித்தார் என்றும், 2 நாட்கள் தீவிரமான பேச்சுவார்த்தைகளை தொடர்ந்து தற்போது போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.

மனிதாபிமானத்தின் அடிப்படையில் இந்த போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக  துணை ராணுவம் தலைநகர் கார்டூமில் உறுதிப்படுத்தியது. மேலும் "போர்நிறுத்த காலத்தில் முழுமையான போர்நிறுத்தத்திற்கான எங்கள் உறுதிப்பாட்டை நாங்கள் உறுதிப்படுத்துகிறோம்" என்று தெரிவிடததுள்ளது.

இதனிடையே சூடான் மக்கள் மற்றும் அண்டை நாடுகளைச் சேர்ந்த மக்கள் உட்பட பல்லாயிரக்கணக்கான மக்கள் கடந்த சில நாட்களில் எகிப்து, சாட் மற்றும் தெற்கு சூடான் ஆகிய நாடுகளுக்கு சென்றுவிட்டனர்.

கனடா, பிரான்ஸ், போலந்து, சுவிட்சர்லாந்து மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள், முடிந்தவரை பலரை மீட்கும் முயற்சியில் தூதரக நடவடிக்கைகளை மறு அறிவிப்பு வரும் வரை நிறுத்தி வைத்துள்ளன.

அதே போல் சூடானை விட்டு வெளியேற விரும்பும் அனைத்து குடிமக்களும் வெளியேற்றப்பட்டதாக ஜப்பான் கூறியது. பிரான்ஸ் நாட்டை சேர்ந்த 191 பேர் மற்றும் 36 பிற நாடுகளைச் சேர்ந்தவர்கள் உட்பட 491 பேரை வெளியேற்ற ஏற்பாடு செய்துள்ளதாக அந்நாடு தெரிவித்துள்ளது. இதற்கிடையில், ஒரு பிரெஞ்சு போர்க்கப்பல், மேலும் வெளியேற்றப்பட்டவர்களை அழைத்துச் செல்வதற்காக போர்ட் சூடானை நோக்கிச் சென்றது.

ஜெர்மன் விமானப்படை விமானங்கள் நிலவரப்படி பல்வேறு நாடுகளை சேர்ந்த 400 க்கும் மேற்பட்ட மக்களை போரால் பாதிக்கப்பட்ட சூடானில் இருந்து வெளியேற்றின. சவூதி நாட்டை சேர்ந்த 101 பேர் பிற நாட்டை சேர்ந்த 26 பேர் உட்பட 356 பேரை வெளியேற்றியது.

இந்தியர்கள் உட்பட 388 பேர் மற்றும் 27 பிற நாட்டவர்கள் மோதல் பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டதாக பிரான்ஸ் நேற்று கூறியது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : BREAKING: மலேசியாவில் பயங்கர நிலநடுக்கம்..சுனாமி எச்சரிக்கை -11 செ.மீ உயர்ந்த நீரின் மேற்பரப்பு -பரபரப்பு

click me!