அமெரிக்கா மட்டுமல்லாது ஜப்பான், வியட்நாம் போன்ற நாடுகளை தொடர்ந்து இந்தியாவிலும் சீனா உளவு பலூன் மூலமாக கண்காணித்துள்ளது என்ற தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்காவில் சீனாவின் உளவு பலூன்கள் பறந்த விவகாரம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக அமெரிக்கா தீவிர விசாரணை நடத்தி வருகிறது. இந்த உளவு பலூன் சீனாவிற்கு என்ன மாதிரியான உளவு தகவல்கள், புகைப்படங்கள் அனுப்பப்பட்டன என்று விசாரணை செய்யப்பட்டு வருகின்றது.
வடக்கு அமெரிக்க மேலே சீனாவின் இந்த ராட்சச பலூன் பறந்து கொண்டு இருந்தது. இந்த பலூன் கடந்த ஞாயிற்றுக்கிழமை சுட்டு வீழ்த்தப்பட்டது. சீனாவின் உளவு பலூன் இது என்று அமெரிக்கா குற்றஞ்சாட்டியது. குறிப்பாக பயணிகள் விமானம் பறக்கும் உயரம், போர் விமானம் பறக்கும் உயரத்திற்கும் அதிகமாக 30 கிமீ உயரத்திற்கு அருகே இந்த பலூன்கள் பறந்து கொண்டு இருந்தன.
இதையும் படிங்க..‘ஊ சொல்றியா மாமா’ பாட்டை போடு.! புஷ்பா பட பாடலை நிறுத்திய கடைக்காரர் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம்
பலூனில் கீழே சென்சார்கள் இருப்பதும், கேமரா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. முதலில் இதை சீனா தங்களுடைய பலூன் இல்லை என்றது. பிறகு இது எங்களுடைய பலூன்தான் என்றும், அட்லாண்டிக் கடலில் சர்வதேச எல்லையில்தான் இது பறந்து கொண்டு இருந்தது. இது வானிலைகக்காக பறக்க விடப்படும் பலூன். வானிலையை கணிப்பது மட்டுமே இதன் வேலை என்றும் சீனா பல்டி அடித்தது.
இந்த நிலையில் 2022 ஜனவரி முதல் அமெரிக்கா தனது வான்வெளியில் 10 பலூன்களை அனுப்பியதாக கடந்த திங்கள் கிழமை சீனா குற்றம் சாட்டியது. தொடர்ந்து இதுகுறித்து விளக்கமளித்த சீனா, அமெரிக்கா மற்ற நாடுகளின் வான்வெளியில் சட்டவிரோதமாக நுழைவது அசாதாரணமானது அல்ல. கடந்த ஆண்டு முதல், அமெரிக்க பலூன்கள் சீன அதிகாரிகளின் அனுமதியின்றி 10 முறைக்கு மேல் சட்டவிரோதமாக சீனாவுக்கு மேலே பறந்துள்ளன.
அமெரிக்காவின் உயரமான பலூன்கள் சட்டவிரோதமாக சீனாவின் வான்வெளியில் நுழைவதைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்று கடுமையாக குற்றஞ்சாட்டி உள்ளது. இந்த நிலையில் சீன பலூன் இந்தியா, ஜப்பான், வியட்நாம் போன்ற நாடுகளையும் உளவு பார்த்திருப்பதாக அமெரிக்க அதிகாரிகள் கூறியிருப்பதாக தனியார் செய்தி நிறுவனத்தில் தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் இதுகுறித்து அதிகாரபூர்வ தகவல் இதுவரை எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க..நடிகர் விஜய் சேதுபதிக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - பின்னணி என்ன.? முழு விபரம் இதோ !!