Turkey Earthquake: துருக்கி நிலநடுக்கத்தில் மாயமான இந்தியர் சடலமாக மீட்பு

Published : Feb 12, 2023, 03:56 PM ISTUpdated : Feb 12, 2023, 04:04 PM IST
Turkey Earthquake: துருக்கி நிலநடுக்கத்தில் மாயமான இந்தியர் சடலமாக மீட்பு

சுருக்கம்

துருக்கி நிலநடுக்கத்தில் மாயமான இந்தியர் விஜய் குமாரின் உடல் சனிக்கிழமை சடலமாக மீட்கப்பட்டிருக்கிறார்.

துருக்கியில் மாயமான இந்தியர் நிலநடுக்கத்தின்போது தரைமட்டமான ஹோட்டல் இடிபாடுகளிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

துருக்கி மற்றும் சிரியா நாடுகளில் பிப்ரவரி 6ஆம் தேதி அதிபயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.8 புள்ளிகள் வரை பதிவான இந்த நிலநடுக்கத்தில் 28 ஆயிரம் பேருக்கு மேல் பலியாகியுள்ளனர்.

மீட்கப்பட்ட பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்கள். இன்னும் தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.  பல நாடுகளில் இருந்தும் பேரிடம் மீட்புக் குழுவினர் துருக்கியில் முகாமிட்டு மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Baby Aya: துருக்கியில் நிலநடுக்கத்தில் அதிசயக் குழந்தை அயா! பல நாட்டினர் தத்தெடுக்க ஆர்வம்!

சனிக்கிழமை 5வது நாளாக நடைபெற்ற மீட்புப் பணியின்போது கண்டெடுக்கப்பட்ட சடலங்களில் ஒன்று மாயமான இந்தியருடையது என்று  தெரியவந்துள்ளது.

பெங்களூருவில் உள்ள நைட்ரஜன் உற்பத்தி செய்யும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்த விஜய் குமார் பணி நிமித்தமாக துருக்கி சென்றபோது காணாமல்போனார்.  துருக்கியில் சனிக்கிழமை மீட்கப்பட்டது அவரது உடல்தான் என்று உத்தராகண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள அவரது குடும்பத்தினர் உறுதி செய்துள்ளனர்.

மலாட்யா என்ற இடத்தில் நிலநடுக்கத்தில் தரைமட்டமான ஹோட்டலின் இடிபாடுகளை அகற்றும்போது விஜய் குமாரின் உடல் மீட்கப்பட்டது. அவரது பாஸ்போட் உள்ளிட்ட அவரது உடைமைகளும் கிடைத்தன. இந்தியத் தூதரகம் அவரது உடலை உத்தராகண்ட் அனுப்பி வைக்க ஏற்பாடு செய்துள்ளனர்.

Sun Breaks Off: சூரியனின் ஒரு பகுதி வெடித்துச் சிதறியது! விண்வெளி புதிருக்கு விடை தேடும் விஞ்ஞானிகள்!

PREV
click me!

Recommended Stories

Check Mate: மோடியுடன் புதின் குடித்த பாயாசத்தால், கலங்கிய அமெரிக்க அதிபரின் அடிவயிறு...! இந்தியாவை முக்கிய கூட்டாளி என அறிவித்த டிரம்ப்.!
ஆஸ்திரியாவின் உயரமான மலை உச்சியில் காதலியைக் கைவிட்டுச் சென்ற நபர் மீது கொலை வழக்கு!