இஸ்ரேலை தொடர்ந்து 1 லட்சம் இந்தியத் தொழிலாளர்களை பணியமர்த்த தைவான் திட்டம்.. என்ன காரணம் தெரியுமா?

By Ramya s  |  First Published Nov 11, 2023, 9:21 AM IST

சீனாவின் அச்சுறுத்தலை எதிர்கொள்ள இந்தியாவும் தைவானும் உறவுகளை வலுப்படுத்த முயற்சி மேற்கொள்வதால், அடுத்த மாதத்திற்குள் இரு நாடுகளும் வேலைவாய்ப்பு இயக்க ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. .


தங்கள் நாட்டில் உள்ள தொழிற்சாலைகள், பண்ணைகள் மற்றும் மருத்துவமனைகளில் பணிபுரிய 100,000 இந்தியர்களை வேலைக்கு அமர்த்த தைவான் அரசு திட்டமிட்டுள்ளது, மேலும் இந்த தொழிலாளர்கள் அடுத்த மாத தொடக்கத்தில் நாட்டிற்கு செல்லலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

சீனாவின் அச்சுறுத்தலை எதிர்கொள்ள இந்தியாவும் தைவானும் உறவுகளை வலுப்படுத்த முயற்சி மேற்கொள்வதால், அடுத்த மாதத்திற்குள் இரு நாடுகளும் வேலைவாய்ப்பு இயக்க ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. . இதற்கிடையில், தைவான் செல்ல விரும்பும் இந்தியத் தொழிலாளர்களின் உடல்நலம் குறித்து சான்றிதழ் அளிக்கும் முறை தற்போது வகுக்கப்பட்டுள்ளது.

Tap to resize

Latest Videos

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

சமீபத்திய ஆண்டுகளில் ஜப்பான், பிரான்ஸ், இங்கிலாந்து, நெதர்லாந்து, கிரீஸ், டென்மார்க் ஆகிய நாடுகளுடன் இந்திய வேலைவாய்ப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இந்த நிலையில் தைவானுடன் இந்திய அரசு வேலை வாய்ப்பு ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. இந்தியா-தைவான் வேலை ஒப்பந்தம் இப்போது பேச்சுவார்த்தைகளின் இறுதி கட்டத்தில் உள்ளது என்பதை மத்திய வெளியுறவு செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி,உறுதிப்படுத்தினார்.

தைவானில் மூத்த குடிமக்கள் அதிகரித்து வருவதால், அங்கு அதிக தொழிலாளர்கள் தேவைப்படுகிறது. 2025 ஆம் ஆண்டளவில் "சூப்பர்-ஏஜ்டு" சமூகமாக மாற உள்ளது. தைவானின் மொத்த மக்கள் தொகையில் ஐந்தில் ஒரு பங்கு முதியவர்கள் இருக்கின்றனர்.

இஸ்ரேலில் இந்திய தொழிலாளர்கள் தேவை

அக்டோபர் 7 ஆம் தேதி ஹமாஸ் தாக்குதலுக்குப் பிறகு இஸ்ரேலில் கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. இந்த பணிகளை மீண்டும் தொடங்க, இஸ்ரேலிய கட்டுமானத் துறையானது, மோதல் தொடங்கியதில் இருந்து பணி அனுமதி ரத்து செய்யப்பட்ட 90,000 பாலஸ்தீனியர்களுக்குப் பதிலாக 1 லட்சம் இந்தியத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்த நிறுவனங்களை அனுமதிக்குமாறு பெஞ்சமின் நெதன்யாகு அரசாங்கத்திடம் கேட்டுள்ளது.

தீபாவளி வந்தாச்சு.. அமெரிக்காவில் ஒலித்த ஓம் ஜெய் ஜகதீஷ் ஹரே பாடல் - அசத்திய பாடகி மேரி மில்பென்! வீடியோ வைரல்

இஸ்ரேல் பில்டர்ஸ் அசோசியேஷனின் துணைத் தலைவர் ஹைம் ஃபெய்க்ல் இதுகுறித்து வெளியிட்ட அறிக்கையில் “ இப்போது நாங்கள் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். இஸ்ரேலிய அரசாங்கம் இந்த முடிவுக்கு ஒப்புதல் அளிக்கும் வரை நாங்கள் காத்திருக்கிறோம், மேலும் இந்தியாவில் இருந்து 50,000 முதல் 100,000 தொழிலாளர்கள் இத்துறையை இயக்கி இயல்பு நிலைக்கு கொண்டு வர முடியும் என்று நம்புகிறோம்.” என்று தெரிவித்தார். 

இஸ்ரேலின் கட்டுமானத் துறையில் பணிபுரியும் தொழிலாளர்களில் 25 சதவிகிதம் பாலஸ்தீனிய தொழிலாளர்கள் உள்ளனர். அக்டோபர் 7ஆம் தேதி முதல் அவர்கள் பணிக்குத் திரும்ப தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

click me!