மில்லியன் கணக்கில் ஜிமெயில் கணக்குகளை தூக்கப்போகும் Google.. ஏன்? - யாரோடதெல்லாம் காலியாகபோது தெரியுமா?

By Ansgar R  |  First Published Nov 10, 2023, 2:14 PM IST

Google : தங்கள் கணக்குகளை அடிக்கடி பயன்படுத்தாத ஜிமெயில் பயனர்கள், வரும் மாதத்தில் தங்கள் ஜிமெயில் கணக்குகளுக்கான அணுகலை இழக்கும் வாய்ப்பு உள்ளது. இதுகுறித்து கூகுள் நிறுவனம் ஒரு தகவலை வெளியிட்டுள்ளது.


வருகின்ற டிசம்பர் 2023ல், குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகளாக செயலிழந்த கணக்குகளை செயலிழக்கச் செய்வதை நோக்கமாகக் கொண்ட செயல்பாட்டின் ஒரு பகுதியாக மில்லியன் கணக்கான ஜிமெயில் கணக்குகள் நீக்கப்படும் அபாயம் உள்ளது.

கடந்த மே மாதம் Google தயாரிப்பு நிர்வாகத்தின் துணைத் தலைவர் Ruth Kricheli எழுதிய வலைப்பதிவு இடுகையில், கூகுள் நிறுவனம் அபாயத்தைக் குறைக்க நடவடிக்கை எடுத்து வருவதாகக் கூறியது. எங்கள் தயாரிப்புகள் முழுவதும் Google கணக்குகளுக்கான செயலற்ற கொள்கையை 2 ஆண்டுகளுக்கு Google மேம்படுத்துகிறது என்று கூறியது. 

Latest Videos

undefined

டிசம்பரில் தொடங்கி, குறைந்தது 2 ஆண்டுகளாக Google கணக்கைப் பயன்படுத்தாமலோ அல்லது உள்நுழையாமலோ இருந்தால், Google Workspace (Gmail, Docs, Drive, Meet, Calendar) மற்றும் Google Photos இல் உள்ள உள்ளடக்கம் உட்பட கணக்கையும் அதன் உள்ளடக்கங்களையும் நாங்கள் டெலீட் செய்யலாம் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

பாதுகாப்பான மாநிலங்களின் பட்டியல்.. இந்தியாவை சேர்க்க முடிவு செய்யும் UK - இதனால் என்ன நடக்கும் தெரியுமா?

"எங்கள் உள்ளக பகுப்பாய்வு ஆய்வின்படி, கைவிடப்பட கணக்குகள் மற்றும் செயலில் உள்ள two step verification factor இல்லாத கணக்குகள் தான் இணைய மோசடி காரர்களின் இலக்காக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. 

சரி யாருடைய ஜிமெயில் கணக்குகள் அழிக்கப்படலாம்?

கடந்த இரண்டு வருடங்களாக Gmail கணக்கைத் திறக்காத தனிப்பட்ட Google கணக்குகளுக்கு மட்டுமே இந்தக் கொள்கை பொருந்தும். மற்றும் பள்ளிகள் அல்லது வணிகங்கள் போன்ற நிறுவனங்களின் கணக்குகளை இது நிச்சயம் பாதிக்காது என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

உங்கள் கணக்கை செயலில் வைத்திருப்பது எப்படி

கூகுள் வலைப்பதிவு இடுகையின்படி, கூகுள் கணக்கை செயலில் வைத்திருக்க எளிய வழி குறைந்தது இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை உள்நுழைவதாகும். நீங்கள் சமீபத்தில் உங்கள் Google கணக்கு அல்லது எங்கள் சேவைகளில் உள்நுழைந்திருந்தால், உங்கள் கணக்கு செயலில் உள்ளதாகக் கருதப்பட்டு நீக்கப்படாது என்று கூகுள் அறிவித்துள்ளது.

கூட்ட நெரிசலை தடுக்க.. இந்தியாவில் வரப்போகுது மின் ஏர் டாக்சி.. வெளியான அதிகாரப்பூர்வ தகவல்கள் - முழு விவரம்!

உங்கள் Google கணக்குடன் Google One, செய்தி வெளியீடு அல்லது ஆப்ஸ் போன்ற செயலில் உள்ள சந்தா இணைக்கப்பட்டிருந்தால், Google இந்தக் கணக்குச் செயல்பாட்டைக் கணக்கில் எடுத்துக்கொள்ளும், மேலும் உங்கள் கணக்கு பாதிக்கப்படாமல் இருக்கும். மேலும், யூடியூப் வீடியோக்களுடன் தொடர்புடைய கணக்குகளை நீக்க கூகுளுக்கு தற்போதைய எண்ணம் இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

click me!