சிக்கலுக்கு மேல் சிக்கல்.. நீதிமன்ற அவமதிப்பு வழக்கு.. வழக்கறிஞர் ரவிக்கு சிறை - சிங்கப்பூர் கோர்ட் அதிரடி!

By Ansgar R  |  First Published Nov 10, 2023, 1:33 PM IST

Singapore News : நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஏற்கனவே சஸ்பெண்ட் செய்யப்பட்ட வழக்கறிஞர் எம்.ரவிக்கு தற்போது புதிய சிக்கல் ஒன்று ஏற்பட்டுள்ளது. அவருக்கு நேற்று முன்தினம் நவம்பர் 8ம் தேதி ஒரு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.


ஏற்கனவே நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிக்கி சஸ்பெண்ட் காலத்தில் உள்ள சிங்கப்பூர் வழக்கறிஞர் ரவி அவர்களுக்கு, கடந்த நவம்பர் 8 ஆம் தேதி பொதுவில் கிடைக்கப்பெற்ற தீர்ப்பின்படி, அவர் ஒன்பது வழக்குகளில் அவமதிப்புக் குற்றவாளியாகக் காணப்பட்டார். இதனால் அவருக்கு 21 நாட்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

நான்கு வழக்குகள் மாநில நீதிமன்றங்களில் மாவட்ட நீதிபதி சாய் யுயென் ஃபேட் முன் சமர்ப்பிக்கப்பட்டன, மீதமுள்ள ஐந்து வழக்குகள் உயர்நீதிமன்றத்தில் நீதிபதி ஆட்ரி லிம் முன் சமர்ப்பிக்கப்பட்டன. வழக்கறிஞர் ரவி மீள் சுமத்தப்பட்ட அனைத்து குற்றங்களும் கடந்த நவம்பர் 2021ம் ஆண்டில் நடந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos

இலங்கை வழியில் செல்லும் பாகிஸ்தான்; லேமினேஷன் பேப்பர் இல்லாமல் புதிய பாஸ்போர்ட்டுகள் பெறுவதில் சிக்கல்!!

மாநில நீதிமன்றங்களில் நடந்தது என்ன? 

கடந்த நவம்பர் 3, 2021 அன்று, மகேந்திரன் முனியாடியின் வழக்கறிஞர் தன்னை டிஸ்சார்ஜ் செய்ய விண்ணப்பித்தார். அதே நேரத்தில் மகேந்திரன் சில கிரிமினல் குற்றச்சாட்டுகளுக்கு விசாரணை கோரியிருந்தார்.

மகேந்திரனின் முந்தைய வழக்கறிஞரிடம் இருந்து வழக்கை எடுத்துக்கொள்வதை உறுதிசெய்ய, நவம்பர் 8, 2021 அன்று சாய் முன் ரவி ஆஜரானார். நவம்பர் 9-ம் தேதி திட்டமிட்டபடி வழக்கு தொடர முடியுமா என்று சாய் ரவியிடம் கேட்டபோது, ​​வேறு எந்த விசாரணையிலும் தனக்கு சம்பந்தம் இல்லை என்று ரவி நீதிபதியிடம் தெரிவித்தார்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

ஏறக்குறைய அரை மணி நேரம் கழித்து, குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவருக்கான விசாரணையில், நவம்பர் 8 முதல் நவம்பர் 10 வரையிலான காலகட்டம் உட்பட, விசாரணைத் தேதிகளுடன், தொடர்பில்லாத கிரிமினல் வழக்குக்காக மற்றொரு நீதிபதியின் முன் ரவி ஆஜரானார். நவம்பர் 9-ம் தேதி சாய் முன் ரவி ஆஜராகவில்லை, அதற்கு பதிலாக வேறு விசாரணைக்கு சென்றார். பின்னர் அவர் காலையில் சாய் முன் ஆஜராகி, ஒத்திவைப்புக்கு விண்ணப்பித்தார்

பாதுகாப்பான மாநிலங்களின் பட்டியல்.. இந்தியாவை சேர்க்க முடிவு செய்யும் UK - இதனால் என்ன நடக்கும் தெரியுமா?

மேலும் பொதுவெளியில் சிலரை தாக்கிய வழக்கும் அவர் மேல் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. அது குறித்த விசாரணைகளும் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றது.

click me!