பாகிஸ்தானில் லேமினேஷன் பேப்பர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், அந்த நாட்டு மக்கள் புதிய பாஸ்போர்ட் பெறுவதில் சிரமத்தை எதிர்கொள்கின்றனர்.
பாகிஸ்தான் நாட்டில் லேமினேஷன் பேப்பர் பற்றாக்குறையால் நாடு முழுவதும் புதிய பாஸ்போர்ட் எடுக்க முடியாமல் மக்கள் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். இந்த செய்தி கடந்த நவம்பர் 8 ஆம் தேதி தி எக்ஸ்பிரஸ் ட்ரிப்யூன் செய்தியில் இடம் பெற்று இருந்ததாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
தி எக்ஸ்பிரஸ் ட்ரிப்யூன் செய்தியின்படி, பாகிஸ்தானில் பாஸ்போர்ட்டிற்கு பயன்படுத்தப்படும் லேமினேஷன் பேப்பர் பிரான்சில் இருந்து இறக்குமதி செய்யப்படுவதாக பாகிஸ்தான் குடியமர்வு மற்றும் பாஸ்போர்ட் இயக்குநரகம் (DGI&P)தெரிவித்ததாக செய்தி வெளியாகியுள்ளது.
பாஸ்போர்ட் பெறுவதில் தொடர்ந்து சிக்கல் ஏற்படுவதால். குறித்து காலத்தில் வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ள முடியாமல் பலரின் கனவுகளும் சிதைக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் வெளிநாடுகளில் பட்டிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தும் குறித்த நேரத்தில் செல்ல முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். பலரும் அமெரிக்கா, பிரிட்டன் என்று படிப்பதற்கு வாய்ப்புகளைப் பெற்றும் பரிதவித்து வருகின்றனர்.
மாணவர்கள் மட்டுமின்றி வர்த்தகம், உறவினர்களைப் பார்ப்பதற்கு என்று திட்டமிட்டு கிரீன் கார்டு கிடைக்காமல் பலரும் அவஸ்தைக்கு உள்ளாகியுள்ளனர். எக்ஸ்பிரஸ் டிரிபியூனுக்கு பஞ்சாப் மாகாணத்தைச் சேர்ந்த ஒருவர் அளித்திருந்த பேட்டியில், ''துபாயில் வேலை செய்ய திட்டமிட்டு இருந்தேன். இறுதியில் எங்களது தலை எழுத்து மாறி நல்ல வாழ்க்கையை அனுபவிக்க இருப்பதாக நினைத்துக் கொண்டு இருந்தோம். ஆனால், அந்த வாய்ப்பு பறிபோகும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதற்குக் காரணம் பாகிஸ்தான் குடியமர்வு மற்றும் பாஸ்போர்ட் இயக்குநரகம் தான் என்று தெரிவித்துள்ளார்.
“கடலுக்கடியில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பால் உருவான புதிய தீவு.. ஆனால் அது..” விஞ்ஞானிகள் சொன்ன தகவல்
இத்தாலியில் படிக்க வாய்ப்பு கிடைத்தும் அக்டோபர் மாதம் செல்ல முடியாமல் பெஷாவரைச் சேர்ந்த மாணவர் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளார். தற்போது இது ஒரு பிரச்சினையாகத் தோன்றினாலும், பாகிஸ்தானுக்கு இது புதிதல்ல. முன்னதாக 2013 ஆம் ஆண்டில், அச்சு இயந்திரங்களுக்குத் தேவையான லேமினேஷன் பேப்பர் மற்றும் நிதி செலுத்து முடியாமல் பாஸ்போர்ட் அச்சிடுதல் பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டன என்று தி எக்ஸ்பிரஸ் ட்ரிப்யூன் குறிப்பிட்டுள்ளது.
உள்துறை அமைச்சகத்தின் ஊடகங்களுக்கான டைரக்டர் ஜெனரல் காதர் யார் திவானா கூறுகையில், "நிலைமை விரைவில் கட்டுக்குள் வரும், பாஸ்போர்ட் வழங்குவது வழக்கம் போல் தொடரும்" என்று தெரிவித்துள்ளார். மேலும், நெருக்கடியை சமாளிக்க அரசாங்கம் தன்னால் இயன்ற முயற்சிகளை செய்தி வருவதாக திவானா தெரிவித்துள்ளார்.
கராச்சியின் வடக்கு நாஜிமாபாத்தைச் சேர்ந்த ஃபைசான் கூறுகையில், தினமும் சுமார் 3,000 பாஸ்போர்ட் விண்ணப்பங்கள் வருவதாக கூறியுள்ளார். பாகிஸ்தான் குடியமர்வு மற்றும் பாஸ்போர்ட் இயக்குநரகத்தின் தவறான நடவடிக்கையே இதற்குக் காரணம் என்றும், இரண்டு மாதங்களுக்கு முன்பு பாச்போர்ட்டிற்கு விண்ணப்பித்து இன்னும் கிடைக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.