வங்கதேசத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் 30 வினாடிகளில் 117 பம் ஸ்கிப் செய்து கின்னஸ் சாதனை நிகழ்த்தியுள்ளார்.
வங்கதேசத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் 30 வினாடிகளில் 117 பம் ஸ்கிப் செய்து கின்னஸ் சாதனை நிகழ்த்தியுள்ளார்.
அமர்ந்து கொண்டே, ஸ்கிப்பிங் கயிற்றால் உடலை தரையிலிருந்து குதிக்கவைப்பது பம்ப் ஸ்கிப்பாகும். இந்த பம் ஸ்கிப் செய்வதற்கு வேகமும், கால், பாதத்தை வேகமாக உயர்த்துவதும் ஒத்து செயல்படுவது அவசியமாகும்.
நோபல் பரிசு பற்றி அறிய வேண்டிய 5 அம்சங்கள் என்ன?
வங்கதேச இளைஞர் மின்னல் வேகத்தில் 30 வினாடிகளில் 117 பம்ப் ஸ்கிப் செய்து கின்னஸ் சாதனை நிகழ்த்திய வீடியோவைப் பார்த்து நெட்டிஸன்கள் வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.
கின்னஸ் உலக சாதனையின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வங்கதேச இளைஞர் சாதனை செய்யும் வீடியோ பகிரப்பட்டு, அதற்கு லட்சக்கணக்கில் லைக் குவிந்துள்ளது.
ஸ்வீடன் உயிரியல் வல்லுநருக்கு மருத்துவத்துக்கான நோபல் பரிசு: எதற்காக வழங்கப்பட்டது?
அதில் குறிப்பிடுகையில் “ வங்கதேச இளைஞர் ரசல் இஸ்லாம் 30 வினாடிகளில் 117 பம் ஸ்கிப் செய்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. #ஸ்கிப்ஸ், #பம்ஸ்கிப்ஸ், மற்றும் #கின்னஸ்வேர்ல்ட்ரெக்கார்ட்ஸ் ஆகிய ஹேஸ்டேக்குகளும் பகிரப்பட்டுள்ளன.
கின்னஸ் உலக சாதனை பிளாக்கில் கூறுகையில் “ வங்கதேச இளைஞர் ரசல் இஸ்லாம் சிறுவயதிலிருந்தே பல்வேறு உலக சாதனைகளைப் பார்த்து தானும் அதுபோல் சாதனை செய்ய வேண்டும் என்பதில் விருப்பமாக இருந்தார். 3நிமிடங்களில் அதிகமான டபுள் ஸ்கிப், ஒரு நிமிடத்தில்ஒரு காலில் ஸ்கிப்பிங் செய்வது போன்ற சாதனையை இஸ்லாம் செய்துள்ளார்” எனத் தெரிவித்துள்ளது
ஆப்கானிஸ்தானில் மிகப்பெரிய குண்டு வெடிப்பு.. 46 சிறுமிகள் உட்பட 53 பேர் பலி - அதிர்ச்சி சம்பவம் !
இந்த வீடியோவை கின்னஸ் சாதனை தளம் பகிர்ந்த சில மணிநேரத்தில் 6.7 லட்சம் பேர் பார்த்தனர், 51,800 லைக் கிடைத்தது. ஏராளமானோர் இஸ்லாத்தின் சாதனையை பாராட்டி வருகிறார்கள். இந்த வீடியோ சமூல வலைத்தளத்தில் டிரண்டாகி வருகிறது