இந்தோனேசியாவின் முக்கிய தீவான ஜாவா மற்றும் சுற்றுலாத் தீவு பாலி ஆகிய பகுதிகளில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்தோனேசியாவின் முக்கிய தீவான ஜாவா மற்றும் சுற்றுலாத் தீவு பாலி ஆகிய பகுதிகளில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 7.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் கிழக்கு ஜாவா மாகாணத்தில் உள்ள கடலோர நகரமான துபானுக்கு வடக்கே 96.5 கிலோமீட்டர் (59.8 மைல்) தொலைவில் 594 கிலோமீட்டர் (369 மைல்) ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு தெரிவித்துள்ளது. முதற்கட்டமாக 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாகவும் ஆரம்ப அளவீடுகளில் மாறுபாடுகள் ஏற்படுவது பொதுவானவை என்றும் இந்தோனேசியாவின் வானிலை, தட்பவெப்பநிலை மற்றும் புவி இயற்பியல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: ஒரு பக்கம் சீனா மிரட்டல்; மறுபக்கம் ஜப்பான் நோக்கி வடகொரியா ஏவுகணை தாக்குதல்!!
மேலும் சுனாமி ஆபத்து இல்லை என்று கூறியதோடு, பின்விளைவுகள் ஏற்படக்கூடும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தோனேசியாவின் ஏற்பட்ட இந்த பயங்கர நிலநடுக்கத்தால் 270 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். இந்தோனேசியாவில் பூகம்பங்கள், எரிமலை வெடிப்புகள் மற்றும் சுனாமிகளால் அடிக்கடி ஏற்படுகிறது.
இதையும் படிங்க: இந்த ஆண்டில் சூப்பர் எல்-நினோ அபாயம்! காலநிலை மாற்ற விஞ்ஞானிகள் எச்சரிக்கை
எரிமலைகளின் வளைவில் அமைந்துள்ளதே இதற்கு காரணம் என கூறப்படுகிறது. மேலும் இது பசிபிக் படுகையில் ரிங் ஆஃப் ஃபயர் என்றும் அழைக்கப்படுகிறது. 2004 ஆம் ஆண்டில், மிகவும் சக்திவாய்ந்த இந்தியப் பெருங்கடல் நிலநடுக்கம் ஒரு டஜன் நாடுகளில் 230,000 க்கும் அதிகமான மக்களைக் கொன்ற சுனாமியை ஏற்படுத்தியது, அவர்களில் பெரும்பாலோர் இந்தோனேசியாவின் ஆச்சே மாகாணத்தில் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.