Global Buddhist Summit : முதல் பௌத்த உச்சி மாநாடு - உலகப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண டெல்லியில் பௌத்த கூட்டம்

By Dinesh TG  |  First Published Apr 13, 2023, 2:15 PM IST

உலக அரசுகளும், மனிதர்களும் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகளுக்கு பௌத்தம் தீர்வுகளை வழங்குகிறதா?
 


முதல் உலகளாவிய பௌத்த மாநாடு வரும் ஏப்ரல் 20-21 தேதிகளில் டெல்லியில் நடைபெற உள்ளது. இதில், மெக்ஸிகோ மற்றும் பிரேசில் உட்பட 30 நாடுகளைச் சேர்ந்த 180 பௌத்த தர்ம குருக்கள், சிந்தனையாளர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் ஆகியோர் பங்கேற்கின்றனர்.

உலகில் தீவிரவாத மோதல் மற்றும் அரசியலின் எழுச்சியைக் கையாள்வதற்கான இந்திய அணுகுமுறையின் ஒரு பகுதியாக இந்த மாநாடு உள்ளது. உலகின் மதங்களை ஒன்றிணைப்பதும், அவற்றின் தலைவர்களிடம் தீர்வு காண்பதும் இந்திய கொள்கையின் ஒரு பகுதியாகும்.

இந்தியாவிலும் இந்தோனேசியாவிலும் சர்வமத அமைதி மற்றும் சமூக நல்லிணக்க கலாச்சாரத்தை வளர்ப்பதில் உலமாவின் பங்கு குறித்து டெல்லியில் நடைபெற்றது. இது பெரும் வெற்றியும் அடைந்தது.

இரண்டு நாள் உலகளாவிய பௌத்த உச்சி மாநாட்டை, புது டெல்லியை தளமாகக் கொண்ட சர்வதேச பௌத்த கூட்டமைப்பு (IBC) ஏற்பாடு செய்துள்ளது. உச்சிமாநாட்டின் கருப்பொருள் ‘தத்துவம் முதல் பிராக்சிஸ் வரையிலான சமகால சவால்களுக்கு பதில்’ என்பதாகும்.



உலகெங்கிலும் உள்ள புகழ்பெற்ற அறிஞர்கள், சங்க தலைவர்கள் மற்றும் தர்ம பயிற்சியாளர்கள் உலகளாவிய பிரச்சனைகளை விவாதிப்பார்கள் மற்றும் பௌத்தத்தின் உலகளாவிய நம்பிக்கைகளிலிருந்து தீர்வுகளைத் தேடுவார்கள். இந்த பௌத்த மாநாட்டில், அமைதி, சுற்றுச்சூழல் நெருக்கடி, சுகாதாரம் மற்றும் நிலைத்தன்மை குறித்து தனித்தனியாக விவதிக்கப்படும். மற்றும் நாளந்தா பௌத்த பாரம்பரியத்தைப் பாதுகாத்தல், அத்துடன் பௌத்த யாத்திரை, பாரம்பரிய மற்றும் புத்தரின் நினைவுச்சின்னங்கள் பாதுகாத்தல் போன்றவையும் அடங்கும்.

இந்த பௌத்த கூட்டம் உலக அளவில் தற்போது மனிதகுலம் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை விவாதித்து அதற்கான பதில்களை தேடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

பௌத்த உச்சிமாநாடு குறித்த பேசிய ஐபிசியின் பொதுச் செயலாளர் டாக்டர் தம்மாபியா, "உலகில் உள்ள பல பிரச்சினைகளை புத்தரின் கட்டளைகளைப் பின்பற்றுவதன் மூலம் தீர்க்க முடியும்" என்றார்.

பூமியில், இரண்டு தீவிரக் கண்ணோட்டங்களுக்கு இடையே மோதல் இருப்பதாகவும், புத்தரின் நடுப் பாதையும் சமநிலையும் அதன் தீர்வுக்கான திறவுகோலாக இருப்பதாகவும் தம்மாபியா கூறினார்.

மாநாட்டில் தார்மீக மற்றும் கலாச்சார சீரழிவு, மத மோதல்கள், ஊழல், உணவு மற்றும் நீர் பாதுகாப்பு இல்லாமை, வேலையின்மை, சுற்றுச்சூழல் சீரழிவு, வறுமை, ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் உலகெங்கிலும் உள்ள சமூகங்கள் எதிர்கொள்ளும் பிற கடுமையான பிரச்சினைகள் குறித்தும் தனித்தனி அமர்வுகளில் விவாதம் நடைபெற உள்ளது.

ஐபிசியின் இயக்குநர் ஜெனரல் அபிஜீத் ஹல்தார் கூறுகையில், தற்போது இந்த உலகம் போர், வன்முறை, இயற்கை பேரிடர்கள், பருவநிலை மாற்றம் போன்ற பெரும் சவால்களை எதிர்கொண்டுள்ளது. மனிதனால் உருவாக்கப்பட்ட இந்த பிரச்சனைகளை மனிதனால் மட்டுமே தீர்க்க முடியும் என்றார்.

உலகளாவிய பௌத்த உச்சி மாநாட்டின் நோக்கம், மனிதர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண உலகம் முழுவதிலுமிருந்து சிறந்த பௌத்த சிந்தனையாளர்களை ஒரே தளத்தில் கொண்டு வருவதே ஆகும் என்றார்.

பௌத்த உச்சிமாநாடு முடிந்ததும், விவாதங்களின் சாராம்சம் அடங்கிய சிறு புத்தகம் வெளியிடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tap to resize

Latest Videos

பாசிகி கிராமத்தின் மீது மியான்மர் ராணுவம் வான்வழித் தாக்குதல்! - 100க்கும் மேற்பட்டோர் பலி!
 

click me!