ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு பார்வை மங்குவதாகவும், நாக்கு மரத்துப்போவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் மங்கலான பார்வையால் அவதிப்படுகிறார் என்று தகவல் வெளியாகி அதிர்ச்சியை கிளப்பியுள்ளது.
ரஷ்ய அதிபரின் உடல்நிலை மோசமடைந்து வருவதாக பல்வேறு வதந்திகள் பரவி வரும் வேளையில், புதிய தகவல் வெளியாகி இருக்கிறது. கடந்த ஆண்டு ரஷ்யா - உக்ரைன் போர் தொடங்கியதில் இருந்து, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் உடல்நிலை எப்போதும் விவாதப் பொருளாகவே இருந்து வருகிறது.
இப்போது, ஒரு புதிய அறிக்கை, அவரது உடல்நிலை மோசமடைந்து வருவதாகக் கூறுகிறது, ரஷ்ய ஜனாதிபதிக்கு "தலையில் கடுமையான வலி, மங்கலான பார்வை மற்றும் நாக்கில் உணர்வின்மை" காரணமாக மருத்துவர்கள் பீதியடைந்துள்ளனர் என்று மெட்ரோ என்ற நிறுவனம் செய்தியை வெளியிட்டுள்ளது.
இதையும் படிங்க..உடனே ராஜினமா.! 12 மாத சம்பளத்தை வாங்குங்க - அமேசான், கூகுள் போட்ட அதிரடி உத்தரவு
ரஷ்ய அதிபரின் உடல்நிலை குறித்த சமீபத்திய செய்திகள் பலவும் அதிர்ச்சியை உண்டாக்கும் விதமாக அமைந்துள்ளது. புடின் தனது வலது கை மற்றும் காலில் பகுதியளவு உணர்வை இழந்துள்ளதாகவும், அவசர மருத்துவ கவனிப்பு தேவைப்படுவதாகவும் அறிக்கை கூறியுள்ளது. டாக்டர்கள் குழு முதலுதவி செய்ததாகவும், புடினுக்கு மருந்து எடுத்துக்கொண்டு பல நாட்கள் ஓய்வெடுக்கவும் உத்தரவிட்டது என்றும் கூறப்படுகிறது.
இருப்பினும், ரஷ்ய ஜனாதிபதி ஓய்வெடுக்க மறுத்ததாகவும், அதற்கு பதிலாக உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு பற்றிய அறிக்கைகள் வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அவரது உடல்நிலையில் தற்போது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது.
ஸ்பானிஷ் செய்தி நிறுவனமான மார்காவின் கூற்றுப்படி, ரஷ்ய அதிபர் புற்றுநோய் மற்றும் பார்கின்சன் நோயுடன் போராடுகிறார் என்று நம்பப்படுகிறது. கசிந்த கிரெம்ளின் மின்னஞ்சல்களில் உள்ள ஒரு பாதுகாப்பு சேவை அதிகாரியால் இது உறுதிப்படுத்தப்பட்டது. இருப்பினும் ரஷ்ய அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது.
இதையும் படிங்க..லெஜன்ட் சரவணன் உடன் நடிக்க சென்ற மணிமேகலை... குக் வித் கோமாளியை விட்டு விலகியது இதுக்குத்தானா?