பாசிகி கிராமத்தின் மீது மியான்மர் ராணுவம் வான்வழித் தாக்குதல்! - 100க்கும் மேற்பட்டோர் பலி!

By Dinesh TG  |  First Published Apr 12, 2023, 10:58 AM IST

மியான்மர் ராணுவம், பாசிகி கிராமத்தில் நடத்திய வான்வழித் தாக்குதலில் குறைந்தது 100 பேர் கொல்லப்பட்டனர்
 


மியான்மரின் ஆளும் ஆட்சி, கடந்த செவ்வாயன்று ஒரு கிராமத்தின் மீது வான்வழித் தாக்குதலை நடத்தியதை உறுதிப்படுத்தியது. அதில் பல குழந்தைகள் மற்றும் செய்தியாளர்கள் உட்பட குறைந்தது 100 பேர் கொல்லப்பட்டதாக தெரிவிகப்பட்டுள்ளது. சகாயிங் பிராந்தியத்தின் கன்பாலு டவுன்ஷிப்பில் உள்ள பாசிகி கிராமத்திற்கு வெளியே நாட்டின் எதிர்க்கட்சி இயக்கத்தின் அலுவலகத்தைத் திறப்பதற்காக மக்கள் கூடியிருந்தனர். அந்த இடத்தில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.


கடந்த செவ்வாய்கிழமை காலை 8 மணியளவில், சுமார் 150 பேர் கொண்ட கூட்டத்தின் மீது ஒரு போர் விமானம் நேரடியாக குண்டுகளை வீசியதாக ஒருவர் தெரிவித்தார். இறந்தவர்களில் பெண்கள் மற்றும் 20 முதல் 30 குழந்தைகளு் அடங்குவர் என்றார். கொல்லப்பட்டவர்களில் உள்நாட்டில் உருவாக்கப்பட்ட அரசாங்க எதிர்ப்பு ஆயுதக் குழுக்கள் மற்றும் பிற எதிர்க்கட்சி அமைப்புகளின் தலைவர்களும் அடங்குவர் என்றும் அவர் கூறினார்.

தாக்குதலைத் தொடர்ந்து, சுமார் அரை மணி நேரத்திற்குப் பிறகு ஹெலிகாப்டர் வந்த ராணுவத்தினர் அந்த இடத்தில் மீண்டும் துப்பாக்கிச்சூடு நடத்தினர் என்றும் கூறினார்.

இராணுவ அரசாங்கத்தால் அறிக்கை வெளியிட தடைசெய்யப்பட்டுள்ளதால், இறப்புகளின் சரியான எண்ணிக்கை தெளிவாக இன்னும் தெரியவில்லை.

செவ்வாய்கிழமை இரவு தாக்குதலை உறுதிப்படுத்திய மியான்மர் இராணுவம், "நாங்கள் அந்த இடத்தைத் தாக்கினோம்" என்று கூறியது. இராணுவ அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், "(ஒரு மக்கள் பாதுகாப்புப் படையின்) அலுவலக திறப்பு விழா... (செவ்வாய்க்கிழமை) காலை சுமார் 8 மணியளவில் பாசிகி கிராமத்தில் நடைபெற்றது. மக்கள் பாதுகாப்புப் படை என்பது தேசிய ஒற்றுமை அரசாங்கத்தின் ஆயுதப் பிரிவாகும். இராணுவத்திற்கு எதிராக தன்னை நாட்டின் சட்டபூர்வமான அரசாங்கம் என்று அழைத்துக்கொள்கிறது.

கொல்லப்பட்டவர்களில் சிலர், "சிவில் உடையுடன் இருந்ததாகவும், சிலர் சதாரண உடையில் இருக்கலாம் என்று் தெரிவித்தார். அதக இறப்புகளுக்கு மக்கள் பாதுகாப்புப் படையால் புதைக்கப்பட்ட கண்ணிவெடிகளே காரணம் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

ஐநா பொதுச்செயலாளர் அந்தோனியோ குட்ரெஸ், மியான்மர் மக்களுக்கு எதிரான வன்முறை பிரச்சாரத்தை நிறுத்துமாறு இராணுவத்திற்கு தனது அழைப்பை மீண்டும் வலியுறுத்தியதுடன், இந்த தாக்குதலை ஐக்கிய நாடுகள் சபை கடுமையாக கண்டிக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் வேதாந்த் படேல் கூறுகையில், இதுபோன்ற வன்முறை தாக்குதல்கள் நாட்டில் "ஆட்சியின் அலட்சியம் மற்றும் மோசமான அரசியல் மற்றும் மனிதாபிமான நெருக்கடியை'' அடிக்கோடிட்டுக் காட்டுகிறது என்றார்.

எதிர்க்கட்சியான தேசிய ஒற்றுமை அரசாங்கம் இந்த தாக்குதலை "பயங்கரவாத இராணுவத்தின் கொடூரமான செயல்" என்று கூறியுள்ளது. மேலும் இது "அப்பாவி பொதுமக்களுக்கு எதிராக அவர்கள் கண்மூடித்தனமான ஆயுத சக்தியைப் பயன்படுத்துவதற்கு மற்றொரு எடுத்துக்காட்டு. இது ஒரு போர்க்குற்றம்" என்றும் கூறியுள்ளது.

டெல்லி - லண்டன் ஏர் இந்தியா விமானத்தில் ஊழியர்களை தாக்கிய பயணி ஒருவரால் பரபரப்பு!!
 

Tap to resize

Latest Videos

click me!