இந்தோனேசிய ஆண் ஒருவருக்கு உடலுறவின் போது ஏற்பட்ட ஆபத்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்தோனேசிய ஆண் ஒருவர் உடலுறவின் போது, ஆணுறுப்பில் எலும்பு முறிவு ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. யூரோலஜி கேஸ் ரிப்போர்ட்ஸ் இதழில் வெளியிடப்பட்ட செய்தியின்படி, 37 வயதுடைய இந்தோனேசிய ஆண் ஒருவர் உடலுறவு கொண்டிருந்தார். அதில் பெண் தனது துணையை விட்டு விலகி மேலே இருந்துள்ளார்.
உடனே அவருக்கு வலி மிகுந்த அசௌகரியம் ஏற்பட்டது. உடனடியாக விறைப்புத்தன்மை இழந்தது. அப்போது ஒரு சத்தம் கேட்டது. சம்பந்தப்பட்ட அவருக்கு தனது ஆணுறுப்பின் நுனியில் இருந்து இரத்தம் வெளியேற ஆரம்பித்தது. அவரால் சிறுநீர் கழிக்க முடியவில்லை. உடனே அவர் மேற்கு நுசா தெங்கரா மாகாணத்தின் பொது மருத்துவமனைக்கு விரைந்தார்.
அவர் மருத்துவமனைக்குச் சென்றபோது, அவரது ஆணுறுப்பு வீங்கி அடர் ஊதா நிறமாக மாறியது என்று கூறப்படுகிறது. பரிசோதனையின் போது, நோயாளியின் ஆணுறுப்பில் அகலமான மற்றும் ஆழமான எலும்பு முறிவு இருப்பது கண்டறியப்பட்டது. அவரது ஆண்குறி திசுக்களும் சிதைந்துள்ளது. ஆண்குறி தொழில்நுட்ப ரீதியாக எலும்பு இல்லாதது.
இதுகுறித்து பேசிய டாக்டர் கரண் ராஜ், “இது உலகின் மிகவும் ஆபத்தான போஸ் ஆகும். இது 50 சதவீத எலும்பு முறிவுகளுக்கு காரணமாகும். அறுவைசிகிச்சை நிபுணர்கள் நோயாளியின் உடைந்த ஆண்குறியை சரி செய்ய முடிந்தது. ஆணுறுப்பில் ஏதேனும் கசிவு அல்லது அசாதாரண வளைவு உள்ளதா என்பதை சரிபார்க்க "செயற்கை விறைப்பு சோதனை" நடத்தப்பட்டது. மூன்று நாட்கள் கழித்து கட்டுகளை அகற்றியபோதும் பிறப்புறுப்பு பகுதி நீலமாக இருந்தது. பிறகு அவர் குணமடைந்தார் என்று கூறினார். இச்சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க..சத்தமே இல்லாமல் அப்டேட்டை கொடுத்த பொன்னியின் செல்வன் 2 படக்குழு.. அடேங்கப்பா இப்படியொரு அப்டேட்டா
இதையும் படிங்க..உடனே ராஜினமா.! 12 மாத சம்பளத்தை வாங்குங்க - அமேசான், கூகுள் போட்ட அதிரடி உத்தரவு