26 பெண்களை திருமணம் செய்த 60 வயது முதியவர்.. மொத்தம் 100 கல்யாணம் பண்ணனும்.. முதியவரின் விபரீத ஆசை !

Published : Feb 22, 2023, 10:11 PM IST
26 பெண்களை திருமணம் செய்த 60 வயது முதியவர்.. மொத்தம் 100 கல்யாணம் பண்ணனும்.. முதியவரின் விபரீத ஆசை !

சுருக்கம்

60 வயது முதியவர் ஒருவர், அவருடைய வாழ்நாளில் 100 முறை திருமணம் செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டு, 26 முறை திருமணம் செய்துள்ளார்.

தனது வாழ்நாளில் 100 முறை திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளார் பாகிஸ்தானை சேர்ந்த ஒருவர்.அதுமட்டும் இல்லை, அந்த நபர் ஏற்கனவே 26 முறை திருமணம் செய்து கொண்டு 22 மனைவிகளை விவாகரத்து செய்துள்ளார்.

அவரது மனைவிகளில் அவரது பேத்தியின் வயதுடைய பெண்களும் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒவ்வொரு மனைவியிடமிருந்தும் அவர் குழந்தைகளை விரும்புகிறார். குழந்தைகள் பிறந்தவுடன் மனைவியை விவாகரத்து செய்கிறார். அந்த நபரின் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க..ச்சீ.. மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை.. உடந்தையாக இருந்த அண்ணன் - கண்ணீருடன் புகார் கொடுத்த மகள்

இந்த வீடியோ ஜியோத் ஜீத் என்ற ட்விட்டர் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. அந்த வீடியோவில், திருமணம் தொடர்பான தனது எண்ணங்களை வெளிப்படையாக வெளிப்படுத்தும் முதியவரை ஒருவர் பேட்டி கண்டுள்ளார். அந்த வீடியோவில் 60 வயது முதியவரும் தனது இளம் வயது மனைவிகளுடன் அமர்ந்திருப்பதைக் காணலாம்.

தற்போது, அவருக்கு மொத்தம் 4 மனைவிகள் உள்ளனர். அவர்களின் வயது 19-20 வயதுக்கு மேல் இல்லை. அவரது வாழ்நாளின் எஞ்சிய பகுதியில், 100 திருமணங்கள் மற்றும் 100 விவாகரத்துகளை எட்டுவது அவரது இலக்கு. அவருக்கு ஏற்கனவே மொத்தம் 22 குழந்தைகள் உள்ளனர், அவர்கள் தங்கள் தாயுடன் வசிக்கின்றனர்.

இதையும் படிங்க..ஆர்.எஸ்.எஸ் அமைப்பை பார்த்து திமுகவுக்கு பயமா.? முதல்வரை எது பயமுறுத்துகிறது.? பாஜக குஷ்பு அதிரடி

விவாகரத்துக்குப் பிறகு மனைவிகள் வாழ்வதற்கு வீடுகள் மற்றும் செலவுகளை வழங்கியதாகவும் அந்த நபர் கூறியுள்ளார். இது தனது பொழுதுபோக்கு என்று கூறியுள்ளார். இந்த வீடியோவைப் பார்த்த பார்வையாளர்கள் ஆச்சரியப்படுகிறார்கள். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க..நாம் தமிழர் கட்சியில் இணையும் காயத்ரி ரகுராம்.? நேற்று திருமா.. இன்று சீமான் - சந்திப்பின் பின்னணி என்ன.?

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

இந்தியா எந்த மாயையிலும் இருக்கக்கூடாது..! பதிலடி முன்பை விட இன்னும் பயங்கரமா இருக்கும்..! அசிம் முனீர் மிரட்டல்..!
இந்தியா-ரஷ்யா நட்பால் வயிற்றெரிச்சல்..! கதறப்போகும் தென்னிந்திய விவசாயிகள்..! டிரம்ப் எடுத்த அதிர்ச்சி முடிவு..!