சீனாவில் பிறப்பு விகிதம் குறைந்துவிட்டதால், சில மாகாணங்கள் திருமணம் ஆனவுடன் சம்பளத்துடன் 30 நாள் விடுமுறை வழங்குவதாக அறிவித்துள்ளன.
சீனாவில் குறைந்துவரும் குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகரிக்கும் நோக்கில் சில மாகாணங்களில் புதிதாகத் திருமணம் செய்துகொண்டவர்களுக்கு 30 நாட்கள் சம்பளத்துடன் விடுமுறை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
தற்போது சீனாவில் 3 நாட்கள் மட்டுமே திருமண விடுப்பு அளிக்கப்பட்டு வருகிறது. பிப்ரவரி மாதம் முதல் சில மாகாணங்கள் கூடுதலாக விடுமுறை வழங்க முடிவு செய்துள்ளனர். இதுகுறித்த செய்தி அந்நாட்டு கம்யூனிஸ்டு கட்சியின் அதிகாரப்பூர்வ நாளிதழில் செவ்வாய்க்கிழமை வெளியாகியுள்ளது.
அந்நாட்டின் வடமேற்குப் பகுதியில் உள்ள கான்சு மாகாணமும், நிலக்கரி உற்பத்தியில் முன்னணியில் இருக்கும் ஷான்ஜி மாகாணமும் 30 நாட்கள் திருமண விடுப்பு வழங்குவதாக அறிவித்துள்ளன. ஷாங்காய் நகரம் 10 நாட்கள் விடுமுறை கொடுக்கிறது.
Sri Lanka Elections: வாக்குச்சீட்டு அச்சடிக்க நிதி இல்லை! இலங்கையில் உள்ளாட்சித் தேர்தல் ரத்தாகிறதா?
“திருமண விடுமுறையை நீட்டிப்பது பிறப்பு விகிதத்தை அதிகரிக்க பயனுள்ள வழிகளில் ஒன்று” என நிதி மற்றும் பொருளாதார பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் யாங் ஹையாங் தெரிவிக்கிறார். குறிப்பிட்ட மாகாணங்கள் மற்றும் நகரங்களில்தான் திருமண விடுப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டுகிறார். வாடகை மானியம், குழந்தை பிறந்தபின் பெண்களைப் போல ஆண்களுக்கும் விடுமுறை வழங்குதல் போன்றவையும் தேவை என யாங் வலியுறுத்துகிறார்.
அதிகாரபூர்வ தரவுகளின்படி, கடந்த அறுபது ஆண்டுகளில் முதல் முறையாக சீனாவின் மக்கள்தொகை கடந்த ஆண்டு சரிவு கண்டது. இது ஒரு நீண்ட கால வீழ்ச்சியின் தொடக்கத்தைக் குறிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஆண்டு, சீனாவில் பிறப்பு விகதம் 1,000 க்கு 6.77 ஆகக் குறைந்துவிட்டது. மக்கள்தொகை பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்காக 1980 முதல் 2015 வரை சீனாவில் ஒரு குழந்தை கொள்கை வற்புறுத்தப்பட்டது. கல்விக் கட்டணங்களும் உயர்த்தப்பட்டன. இதனால் சீனர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகளைப் பெறுவதை விரும்பவில்லை அல்லது குழந்தை பெறுவதையே தவிர்த்தனர்.
US Presidential Election 2024: ட்ரம்ப்க்குப் போட்டியாக களமிறங்கத் தயாராகும் இந்திய வம்சாவளி இளைஞர்