Srilanka : மின்சார கட்டணம் 264 % உயர்வு.. இருட்டில் தவிக்கும் இலங்கை மக்கள் ! அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி

By Raghupati R  |  First Published Aug 10, 2022, 5:04 PM IST

இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடி நிலையை சந்தித்து வருகிறது. 


இலங்கையில் உணவு பொருட்கள், பெட்ரோல், டீசல் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த பொருட்களின் விலை பலமடங்கு உயர்ந்துள்ளது. இதற்கு இலங்கையில் ஆட்சி செய்த அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சே ஆகியோரின் தவறான பொருளாதார கொள்கைகள் தான் காரணம் என பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.

Tap to resize

Latest Videos

இலங்கை அரசிடம் அந்நியச்செலாவணி குறைந்ததால், வெளிநாடுகளில் இருந்து எந்தப் பொருட்களையும் இறக்குமதி செய்ய முடியவில்லை. மருந்து, அத்தியாவசியப் பொருட்கள், உணவுப்பொருட்கள், பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை விண்ணை முட்டும்அளவு உயர்ந்துவிட்டது என்று பொருளாதார அறிஞர்கள் கருதுகிறார்கள்.

மேலும் செய்திகளுக்கு..ஒன்று சேரும் ஓபிஎஸ் - சசிகலா? பதறும் எடப்பாடி பழனிசாமி..அதிமுகவில் மீண்டும் பரபரப்பு !

சமீபத்தில் பேசிய இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே, ‘அடுத்த 6 மாதங்கள் முதல் ஓராண்டு வரை இலங்கையின் பொருளாதார நெருக்கடி நீடிக்கும். அடுத்த ஆண்டு ஜூலை வரை இந்த கடினமான நாட்களை நாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என நினைக்கிறேன். நாட்டின் பொருளாதார மீட்சிக்கு அணுசக்தி மற்றும் தளவாடங்கள் போன்ற புதிய துறைகளை நாம் பார்க்க வேண்டும். 

இதில் தளவாடங்கள் துறையை நான் அதிகமாக நம்புகிறேன். இந்திய, வங்காளதேச, பாகிஸ்தான் பொருளாதாரங்களை பார்க்கும்போது, கொழும்பு, அம்பன்தோட்டா, திரிகோணமலையிலும் தளவாடங்கள் துறை மிகப்பெரிய பங்காற்ற முடியும்’ என்று கூறினார். இந்நிலையில் இலங்கையில் வரலாறு காணத அளவிற்கு, மின்கட்டணத்தை 264% உயர்த்தியுள்ளது அந்நாட்டு மின்சார வாரியம். 

கடந்த 9 ஆண்டுகளில், இதுவரை இல்லாத அளவிற்கு மின் கட்டண விலை உயர்ந்துள்ளது. இந்த மின் கட்டண உயர்வானது, மிகவும் குறைந்த அளவில் மின்சாரத்தை பயன்படுத்துபவர்களுக்கு அதிக சிரமத்தை ஏற்படும் என கூறப்படுகிறது. இன்று முதல் இந்த மின் கட்டண உயர்வு அமலுக்கு வரும் என இலங்கை மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். ஏற்கனவே பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கை மக்களுக்கு, இந்த செய்தி பேரதிர்ச்சியாக வெளியாகி இருக்கிறது.

மேலும் செய்திகளுக்கு..நான் SOFT கிடையாது.. சர்வாதிகாரியாக மாறுவேன்.! அரசு அதிகாரிகள் கூட்டத்தில் கொந்தளித்த முதல்வர் ஸ்டாலின்!

click me!