இலங்கையை விட்டு வெளியேறுவதற்கு முன்னாள் பிரதமர் மகிந்தா ராஜபக்ச, அவரின் சகோதரர் பசில் ராஜபக்ச ஆகிய இருவருக்கும் விதிக்கப்பட்ட தடையை செப்டம்பர் 5ம் தேதிவரை நீட்டித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இலங்கையை விட்டு வெளியேறுவதற்கு முன்னாள் பிரதமர் மகிந்தா ராஜபக்ச, அவரின் சகோதரர் பசில் ராஜபக்ச ஆகிய இருவருக்கும் விதிக்கப்பட்ட தடையை செப்டம்பர் 5ம் தேதிவரை நீட்டித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இலங்கையின் பொருளாதாரச் சீரழிவுக்குக் காரணமானவர்கள் குறித்துவிசாரணை நடத்த வேண்டும் எனக் கோரி சிலோன் வர்த்தகக்கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் சந்திரா ஜெயரத்னே, இலங்கை முன்னாள் நீச்சல் சாம்பியன் ஜூலியன் போலிங், ஜீஹன் கனகரத்னே, இலங்கை வெளிப்படை அமைப்பு ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இலங்கை முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச அவரின் சகோதரர்கள் நாட்டைவிட்டு வெளியேற தடை நீட்டிப்பு
இலங்கை அதிபராக கோத்தபய ராஜபக்ச, பிரதமராக மகிந்த ராஜபக்ச ஆட்சியில் இருந்தபோது, நாட்டின் பொருளாதாரம் அதளபாதாளத்துக்குச் சென்றுவிட்டது. இலங்கை அரசிடம் வெளிநாடுகளில் இருந்து அத்தியாவசியப் பொருட்கள், உணவுப் பொருட்கள்,மருந்துகள்,பெட்ரோல், டீசல் வாங்கக்கூட அந்நியச்செலாவணி இல்லை. இதனால் உள்நாட்டில் பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்தது.
இதையடுத்து, நாட்டின் பொருளாதாரச் சீர்குலைவுக்கு காரணமானவர்கள் மீது விசாரணை நடத்தக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
தில்லாக தைவான் வந்திறங்கிய நான்சி பெலோசி அதிரடி அறிக்கை; மிரட்டும் சீனா!!
இந்த மனுவில், நாட்டின் பொருளாதாரச் சீர்குலைவுக்கு பசில் ராஜபக்ச, மகிந்தா ராபக்ச, ரிசர்வ் வங்கி கவர்னர் அஜித் நிவார்ட் கேப்ரல் ஆகியோர்தான் காரணம்.இவர்கள்தான் நேரடிப் பொறுப்பு. இலங்கையில் உணவு, எரிபொருள், மருந்துகள் பற்றாக்குறை ஏற்பட்டு, விண்ணை முட்டும் அளவுக்கு விலைவாசி உயர்ந்ததற்கும் இவர்கள்தான் காரணம் என்று தங்கள் மனுவில் தெரிவித்திருந்தார்கள்.
இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஜூலை 28ம் தேதிவரை ராஜபக்ச சகோதரர்கள் நாட்டை விட்டு வெளியேறத் தடைவிதித்தது, பின்னர் தடையை ஆகஸ்ட் 2ம் தேதிவரையிலும் பின்னர் 11ம் தேதிவரையிலும் நீட்டித்து உத்தரவிட்டது.
இலங்கை வரும் சீன கப்பல்; தமிழ்நாட்டை வேவு பார்க்கிறதா? பதறும் இலங்கை!!
இந்நிலையில் முன்னாள் பிரதமர் மகிந்தரா ராஜபக்ச, பசில் ராஜபக்சவுக்கு விதிக்கப்பட்டிருந்த தடைக்காலம் நாளையுடன் முடிகிறது. இதையடுத்து, இருவருக்கான தடையை செப்டம்பர் 5ம் தேதிவரை நீட்டித்து உச்ச நீதிமன்றம் இன்றுஉத்தரவிட்டது.