சிங்கப்பூரில் 22 பேருக்கு ஜிகா வைரஸ் தொற்று பாதிப்பு! - சுற்றுப்புரத்தை ஆரோக்கியமாக வைக்க அரசு வலியுறுத்தல்

By Dinesh TG  |  First Published Jul 6, 2023, 10:36 AM IST

சிங்கப்பூரில் இந்த ஆண்டு 22 ஜீகா வைரஸ் நோய் தொற்று பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சர் கிரேஸ் ஃபூ தெரிவித்துள்ளார்.
 


உலகின் பல பகுதிகளில் ஜிகா வைரஸால் ஆயிரக்கணக்கானோர் மரணமடைந்துள்ள நிலையில் சிங்கப்பூரில் இந்த ஆண்டின் முற்பகுதியில் ஜிகா வைரஸ் பாதிப்பு இல்லை என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது 22 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் கிரேஸ் ஃபூ தெரிவித்துள்ளார்.

1947–ம் ஆண்டு உகாண்டாவில் உள்ள ஜிகா (Zika) என்ற காட்டில் முதன்முதலில் குரங்குகளை தாக்கியபோதுதான் இப்படி ஒரு கிருமி இருப்பது குறித்து தெரிய வந்தது. இதனையடுத்த 1952–ம் ஆண்டு உகாண்டாவிலும், டான்சானியாவிலும் இந்த வைரஸ் மனிதர்களையும் தாக்கியது.

கொசுக்கடியால் புதிய கிருமி தொற்றி வருவது தற்போது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. ஜிகா காடுகளில் முதன்முதலில் இந்த கிருமி உருவானதால் அதற்து ஜிகா வைரஸ் என பெயரிடப்பட்டது.

கடந்த 2007 மற்றும் 2013–ம் ஆண்டுகளில், பசிபிக் நாடுகளில் ‘ஜிகா’ வைரஸ் தாக்கியது. அமெரிக்க நாடுகளான பிரேசில் மற்றும் கொலம்பியாவிலும், ஆப்பிரிக்காவிலும் அக்கிருமி தாக்கியது. ஜிகா வைரஸ், தென் அமெரிக்கா, மத்திய அமெரிக்காவை சேர்ந்த 23 நாடுகளில் தாக்கியது. இதனால் ஆயிரக்கணக்கொனோர் உயிரிழந்தனர்.

சிங்கப்பூர் வானில், மேகமூட்டத்தின் நடுவே பிரகாசமாக தோன்றி பெருமுழு நிலவு!

தற்போது, சிங்கப்பூரில் 22 பேருக்கு ஜிகா நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதில் கோவன் வட்டாரத்தில் அதிகபட்சமாக 15 பேருக்கு நோய் தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. நோய் பாதிப்பு ஏற்பட்ட பகுதிகள் சுகாதாரத்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், தொடர் கண்காணிப்பில் இருப்பதாகவும் கிரேஸ் ஃபூ தெரிவித்தார்.

ஜீகா வைரஸ் நோய் தொற்று குறித்து, சிங்கப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் மெல்வின் யோங் எழுப்பிய கேள்விக்கு, அமைச்சர் கிரேஸ் ஃபூ எழுத்துபூர்வமாகப் பதிலளித்துள்ளார். அதில், ஜிகா தொற்று ஏடிஸ் என்ற கொசு மூலம் பரவுவதால் அதைக் கட்டுப்படுத்த Project Wolbachia உதவக்கூடும் என்றார். ஆனால் கொசுக்களின் இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்த நல்ல ஆரோக்கியமான வீட்டுப் பராமரிப்பு தேவை என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் கிரேஸ் ஃபூ வலியுறுத்தினார்.

Tap to resize

Latest Videos

விலாசம் மாத்தினா சொல்லமாட்டீங்களா? கடுப்பாகி Fine போட்ட சிங்கப்பூர் அரசு - எத்தனை லட்சம் தெரியுமா?

click me!