
சான் பிரான்சிஸ்கோ இந்திய துணைத் தூதரகத்தில் தீ வைக்கப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு, லண்டனில் உள்ள இந்திய தூதரகத்துக்கு வெளியே காலிஸ்தான் பிரிவினைவாதிகள் ஜூலை 8ஆம் தேதி "கில் இந்தியா" பேரணிக்கு அழைப்பு விடுக்கும் போஸ்டரை வைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து ட்விட்டரில் பல அடையாளம் தெரியாத நபர்கள் பதிவிட்டுள்ளனர். அவர்கள் ஒவ்வொருவரையும் 10 க்கும் குறைவான நபர்களே பின்தொடர்கிறார்ள். அந்தக் கணக்குகள் அனைத்தும் ஜூன் 2023 இல் உருவாக்கப்பட்டவையாகவும் உள்ளன. அவர்கள் ஒரே ட்வீட்டைப் பகிர்ந்து ஜூலை 8ஆம் தேதி 'கில் இந்தியா' பேரணியில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்துள்ளனர்.
காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் நிஜ்ஜார் படுகொலையில் இந்தியாவுக்குத் தொடர்பு இருப்பதாகக் கூறி இந்தப் பேரணியை நடத்துவதாகவும் தெரிவித்துள்ளனர். இந்திய ஊடகங்களைச் சேர்ந்த செய்தியாளர்கள் பலரது பெயரையும் தங்கள் பதவில் டேக் செய்துள்ளனர்.
பழங்குடியின இளைஞர் முகத்தில் சிறுநீர் கழித்த பாஜக நிர்வாகியின் வீட்டை இடித்துத் தள்ளிய அரசு
அவர்களின் பதிவில் ஜூலை 8ஆம் தேதி மதியம் 12.30 மணிக்கு லண்டனில் உள்ள இந்திய தூதரகத்திற்கு வெளியே காலிஸ்தான் சுதந்திரப் பேரணி நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது. இங்கிலாந்திற்கான இந்திய தூதரக அதிகாரிகள் விக்ரம் துரைசாமி மற்றும் பர்மிங்காமில் உள்ள இந்திய தூதரக அதிகாரி டாக்டர் ஷஷாங்க் விக்ரம் ஆகியோரின் படங்களும் அந்த போஸ்டரில் இடம்பெற்றுள்ளன. அவர்கள் இருவரும் "ஹர்தீப் சிங் நிஜ்ஜாரைக் கொன்றவர்கள்" என்று அவதூறாகக் குற்றம்சாட்டியுள்ளனர்.
காலிஸ்தான் பயங்கரவாத தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார், ஜூன் 18ஆம் தேதி கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் இரண்டு அடையாளம் தெரியாத நபர்களால் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். அதன் எதிரொலியாகவே அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் உள்ள இந்தியத் தூதரகத்திற்கு கடந்த சனிக்கிழமை தீ வைக்கப்பட்டது. அதனை இந்தியாவும் அமெரிக்காவும் இந்தியாவும் வன்மையாகக் கண்டித்தன.
கடந்த மார்ச் மாதம் 19ஆம் தேதி காலிஸ்தான் பிரிவினைவாதிகள் பிரிட்டனின் லண்டன் நகரில் உள்ள இந்தியத் தூதரகத்தில் ஏற்றப்பட்ட இந்திய மூவர்ணக் கொடி இறக்க முயற்சி செய்தனர். பஞ்சாப்பைச் சேர்ந்த காலிஸ்தான் தலைவர் அம்ரித்பால் சிங் கைது நடவடிக்கையை எதிரொலியாக இந்தச் சம்பவம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவிலும் இந்தியத் தூதரகமும் காலிஸ்தான் பயங்கரவாதிகளால் தாக்கப்பட்டது.
ஒரே ஆண்டில் 30.8 பில்லியன் இழப்பு; டாலர் மதிப்பு உயர்ந்தும் நஷ்டம் அடைந்த சிங்கப்பூர்!