டிரம்ப் மீது 11-வது ‘செக்ஸ்’ புகார் : நிர்வாண நடிகையிடம் தவறாக நடந்ததாக குற்றச்சாட்டு

First Published Oct 24, 2016, 4:42 AM IST
Highlights


அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் குடியரசுக் கட்சியின் வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் மீது 11-வது செக்ஸ் புகார் கூறப்பட்டுள்ளது.

ஏற்கனவே பல பாலியல் குற்றச்சாட்டுக்களால் ஆதரவாளர்கள் மத்தியில் கடும் மரியாதைக்குறைவை சந்தித்து வரும் டிரம்புக்கு இது அடுத்த பின்னடைவாகும்.

அதிபர் தேர்தல்

அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 8-ந் தேதி நடக்க உள்ளது. இதில் ஆளும் ஜனநாயகக் கட்சி சார்பில் ஹிலாரி கிளிண்டனும், குடியரசுக் கட்சி சார்பில் டொனால்ட்டிரம்பும் போட்டியிடுகின்றனர். தேர்தல் நெருங்கும் வேளையில் இருவரும் ஒருவர் மீது ஒருவர் கடுமையான குற்றச்சாட்டுக்களையும், விமர்சனங்களையும் வைத்து வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த இருவாரத்துக்கு முன், வாஷிங்டன் போஸ்ட் நாளேடு, கடந்த 2005-ம் ஆண்டு டிரம்ப் தனிப்பட்ட முறையில் பேசிய வீடியோவை வௌியிட்டது. அதில் டிரம்பும், டி.வி நிகழ்ச்சி தொகுப்பாளர் பில்லி புஷ்சும் பெண்கள் குறித்து மிகவும் ஆபாசமாக பேசியிருந்தனர்.

எதிர்ப்பு

இந்த வீடியோ அமெரிக்காவில் வெளியானதில் இருந்து டிரம்புக்கு மக்கள் மத்தியில் இருந்த ஆதரவு படிப்படியாக குறையத் தொடங்கியது. பெண்களும் பல நகரங்களில் டிரம்புக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி, ஆர்ப்பாட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

புகார்கள்

இதற்கு முன், டிரம்பின் பாலியல் துன்புறுத்தல்களால் பாதிக்கப்பட்ட 10 பெண்கள் தாமாக முன்வந்து ஊடங்கங்களுக்கு பேட்டி அளித்து புகார் அளித்துள்ளனர்.

இந்நிலையில், 11-வதாக பாலியல் கல்விப் பயிற்சி அளிப்பவரும், பாலியல் திரைப்பட நடிகையான ஜெசிகா டிரேக்(வயது42) டிரம்ப் மீது குற்றச்சாட்டு கூறியுள்ளார்.

லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஜெசிகா டிரேக் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

முத்தமிட்டார்

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் கலிபோர்னியாவில் உள்ள லேக் டாகோ எனும் இடத்தில் கோல்ப் போட்டி நடக்கும் பகுதியில் டிரம்பை சந்தித்தேன். அப்போது என்னுடைய இருந்த பெண்களையும், என்னையும் டிரம்ப் விருந்துக்கு வருமாறு அழைத்தார்.

அப்போது, திடீரென என்னுடைய இருந்த பெண்களையும், என்னையும் எங்களின் அனுமதியின்றி திடீரென இறுக்கி அனைத்து முத்தமிட்டார்.  அதுமட்டுமில்லாமல்தன்னுடன் ஒரு இரவு தங்க 10 ஆயிரம் டாலர் தருவதாகவும் தெரிவித்தார்.

மறுப்பு

அதன்பின், நான் எனது ஓட்டல் அறைக்குச் சென்றபின், டிரம்பின் உதவியாளர் எனக்கு தொலைபேசி அழைப்புச் செய்தார். அவர் என்னிடம், டிரம்ப்உங்களைதனியாக சந்திக்க நினைக்கிறார். உங்களுடன் விருந்து சாப்பிட விரும்புகிறார் என்றார். ஆனால், நான் அதற்கு மறுத்துவிட்டேன்.

அதன்பின், டிரம்ப் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, உனக்கு எவ்வளவு பணம் வேண்டும். 10 ஆயிரம் டாலர் போதுமா? என என்னிடம் பேரம் பேசினார். ஆனால், நான் மறுத்துவிட்டேன் என்று தெரிவித்தார்.

ஹிலாரியின் திட்டம்

டிரம்பின் பிரசார அமைப்பினர், ஜெசிகா டிரேக்கின் குற்றச்சாட்டை முழுமையாக மறுத்துள்ளனர். ஜெசிகா கூறுவது ஆதாரமற்ற குற்றச்சாட்டு. டிரம்ப் இதற்கு முன்ஜெசிகாவை ஒருமுறை கூட சந்தித்து இல்லை. ஹிலாரியின் பிரசார அமைப்பு டிரம்ப் மீது களங்கம் சுமத்தும் அடுத்த திட்டம், முயற்சியாகும் எனத் தெரிவித்துள்ளனர். 

வழக்கு தொடர்வேன்

அதேசமயம், இது குறித்து டிரம்ப் கூறுகையில், “ நான் தேர்தலில் வெற்றி பெற்ற பின், என்மீது குற்றம்சுமத்தியவர்கள் மீது சட்டப்படி வழக்கு தொடர்வேன்.அமெரிக்க மக்களின் மனதில் விஷம் கலக்கும் முயற்சியாகும். ஒவ்வொரு பெண்ணும் பொய்யான குற்றச்சாட்டை கூறி, எனது பிரசாரத்தை முடக்கநினைக்கிறார்கள். இது முற்றிலும் கட்டுக்கதை'' எனத் தெரிவித்தார்.

click me!