“அவர்கள் நரமாமிசம் உண்பவர்கள்” பெற்றோர், உடன்பிறந்தவர்களைக் கொன்ற இளைஞர் சொன்ன அதிர்ச்சி தகவல்

Published : May 27, 2023, 01:47 PM ISTUpdated : May 27, 2023, 02:57 PM IST
 “அவர்கள் நரமாமிசம் உண்பவர்கள்”  பெற்றோர், உடன்பிறந்தவர்களைக் கொன்ற இளைஞர் சொன்ன அதிர்ச்சி தகவல்

சுருக்கம்

சீசர் ஒலால்டே என்ற அந்த இளைஞர் தனது பெற்றோர் மற்றும் ஐந்து வயது சகோதரன் உட்பட இரண்டு உடன்பிறந்தவர்களை கொடூரமான முறையில் கொலை செய்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில், 18 வயது இளைஞர் ஒருவர் தனது சொந்த குடும்பத்தினரை கொன்றதற்காக கைது செய்யப்பட்டார். சீசர் ஒலால்டே என்ற அந்த இளைஞர் தனது பெற்றோர் மற்றும் ஐந்து வயது சகோதரன் உட்பட இரண்டு உடன்பிறந்தவர்களை கொடூரமான முறையில் கொலை செய்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கடந்த செவ்வாயன்று ஒரு நபர் தனது குடும்பத்தினருக்கு தீங்கு விளைவித்து தற்கொலை மிரட்டல் விடுத்ததாக காவல்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலில் பேரில் போலீசார் சென்று பார்த்த போது, அங்கிருந்த சீசர், உள்ளே பலர் இறந்து கிடப்பதாகவும் கூறியுள்ளார். இதை தொடர்ந்து சந்தேகத்தின் பேரில் போலீசார் அவரை கைது செய்தனர்.

இதையும் படிங்க : சீனாவை பயமுறுத்தும் புதிய கொரோனா வைரஸ்.. XBB வேரியண்ட் இந்தியாவிற்கும் பரவுமா?

சீசரின் பெற்றோரான ரூபன் ஒலால்டே மற்றும் ஐடா கார்சியா, மூத்த சகோதரி லிஸ்பெட் ஒலால்டே மற்றும் இளைய சகோதரர் ஆலிவர் ஒலால்டே ஆகியோரின் உடல்கள் குளியலறையில் மீட்கப்பட்டன. வீட்டின் பல்வேறு இடங்களில் இருந்து அவர் துப்பாக்கியால் சுட்டு கொன்று, பின்னர் கழிவறைக்கு இழுந்த சென்றிருக்கலாம் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

தனது குடும்பத்தினர் நரமாமிசம் உண்பவர்கள் என்றும் "அவர்கள் தன்னை சாப்பிட திட்டமிட்டதால் அவர்களை கொன்றதாக சீசர் காவல்துறையில் தெரிவித்துள்ளார். எனினும் சீசரின் அண்டை வீட்டாரான ராபர்ட் வார்ட் உயிரிழந்தவர்கள் மிகவும் நல்லவர்கள், கடின உழைப்பாளிகள் என்றும் தெரிவித்தார். அது ஒரு அழகான குடும்பமாக இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

இதையும் படிங்க : அடுத்த ஆபத்து? Powassan என்ற கொடிய வைரஸால் ஒருவர் பலி.. என்னென்ன அறிகுறிகள்? என்ன சிகிச்சை?

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

காஷ்மீர் விவகாரத்தில் நாட்டாமை செய்ய மாட்டோம்... அடியோடு மனம் மாறிய ட்ரம்ப்..! பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி
நாடாளுமன்றக் கட்டிடத்திற்கு தீ..! நேபாளப் பிரதமர் ராஜினாமா..! நாட்டை விட்டே ஓடிய தலைவர்கள்..!