ஞாயிற்றுக்கிழமை ஏடன் வளைகுடாவில் உள்ள ஏமன் கடற்கரை அருகே அகதிகள் வந்த படகு கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் ஆப்பிரிக்க நாட்டை சேர்ந்த 68 பேர் உயிரிழந்தனர். மேலும் 74 பேர் காணாமல் போயினர். ஐநா இது குறித்த தகவலை வெளியிட்டுள்ள நிலையில், இது ஏமன் கடற்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.