எல்லையில் உள்ள சிவன் கோவில் தொடர்பாக தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையே நீண்ட பிரச்சனை இருந்து வந்தது. இந்த பிரச்சனை இருநாடுகள் இடையேயான மோதலாக தற்போது உருவாகி உள்ளது. நேற்று இருநாடுகளின் ராணுவ வீரர்களும் எல்லையில் துப்பாக்கிச்சூடு நடத்தினர். கம்போடியா மீது தாய்லாந்து போர் விமானங்கள் மூலமும், பீரங்கி பயன்படுத்தியும் தாக்குதல் நடத்தியது. இந்த மோதலில் மொத்தம் 14 பேர் பலியாகி உள்ள நிலையில் ஒரு லட்சம் பேர் வெளியேற்றப்பட்டுள்ளன