Velmurugan s | Published: Mar 17, 2025, 8:00 PM IST
முன்னாள் அமெரிக்க கடற்படை அதிகாரியும், அனுபவம் வாய்ந்த விண்வெளி வீராங்கனையுமான சுனிதா வில்லியம்ஸ், விண்வெளி ஆய்வுக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை வழங்கியுள்ளார். நாசாவில் மிகவும் திறமையான விண்வெளி வீராங்கனைகளில் ஒருவராகவும் திகழ்கிறார். இவ்வளவு சிறந்து விளங்கும் சுனிதா வில்லியம்ஸ் எவ்வளவு சம்பளம் பெறுகிறார் என்று தெரியுமா?சுனிதா வில்லியம்ஸின் அனுபவம் மற்றும் பதவியைக் கருத்தில் கொண்டு, அவரது சம்பளம் GS 14 அல்லது GS 15 கிரேடுக்கு ஏற்ப இருக்கலாம். அவரது ஆண்டுச் சம்பளம் சுமார் 152,258 டாலர் (1.26 கோடி ரூபாய்) என்று பல செய்தி அறிக்கைகள் கூறுகின்றன. சம்பளத்தைத் தவிர, நாசாவில் உள்ள விண்வெளி வீரர்களுக்கு விரிவான சுகாதார காப்பீடு, மேம்பட்ட மிஷன் பயிற்சி, மனநல ஆதரவு, பயணச் சலுகைகள் உள்ளிட்ட பல சலுகைகள் கிடைக்கின்றன.