Velmurugan s | Published: Mar 28, 2025, 6:01 PM IST
மியான்மர் மற்றும் தாய்லாந்தில் இன்று அடுத்தடுத்து கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. மியான்மரின் மாண்டலே அருகே முதலில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.7 ஆக பதிவாகியிருந்தது. நிலநடுக்கம் காரணமாக, மியான்மர் மற்றும் தாய்லாந்தின் பல்வேறு இடங்களில் கட்டிடங்கள் இடிந்து விழுந்து தரைமட்டமாகி உள்ளன. தாய்லந்து தலைநகர் பாங்காக்கில் மிகப்பெரிய கட்டிடம் சரிந்து விழுந்துள்ளது. பாங்காக்கில் இருந்து களநிலவரம் குறித்து நம்மிடம் விஷயங்களை பகிர்ந்து கொண்ட வெங்கடேஷ் அங்கு சயான் ஐகான் கட்டிடம் என்ற கட்டிடம் இடிந்து விழும் நிலையில் இருப்பதாகவும் அதில் சிக்கியுள்ள மக்களை மீட்க தாய்லாந்து அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் நிலநடுக்கம் காரணமாக தாய்லாந்து பொருளாதாரம் பெருமளவில் பாதிக்கும் எனறும் தெரிவித்தார்