Velmurugan s | Published: Mar 19, 2025, 6:01 PM IST
காசா மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் குழந்தைகள், பெண்கள் என 100க்கும் அதிகமானோர் உயிரிழந்ததாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இஸ்ரேல் – ஹமாஸ் இடையே கடந்த 15 மாதங்களுக்கும் மேலாக நீடித்து வந்த போர் நிறுத்தப்பட்டு போர் நிறுத்த ஒப்பந்தப்படி ஹமாஸ் பிடியிலுள்ள இஸ்ரேல் பணய கைதிகளும், அதற்கு ஈடாக இஸ்ரேல் சிறையில் உள்ள பாலஸ்தீனர்களும் விடுவிக்கப்பட்டு வந்தனர்போர் ஒப்பந்தத்தையும் மீறி தெற்கு மற்றும் மத்திய காசா பகுதியில் உள்ள மவாரி, கான் யூனிஸ், அல் தராஜ், ராஃபா உள்ளிட்ட பகுதிகளில் இஸ்ரேல் படையினர் வான்வழித் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இதில் குழந்தைகள், பெண்கள் என 100க்கும் அதிகமானோர் உயிரிழந்ததாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதேபோன்று சிரியா, லெபனானின் பல்வேறு பகுதிகளிலும் இஸ்ரேல் ராணுவம் தாக்குதலை நடத்தியுள்ளது. இதன்மூலம் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மீண்டும் போரைத் தொடங்கியுள்ளதாக ஆங்கில ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.