சாக்கடல் எனும் சவக்கடலின் (DEAD SEA) ஒரு கரை இஸ்ரேல் நாட்டிலும், ஒரு கரை ஜோர்தான் நாட்டிலும் உள்ளது. சவக்கடல் என்பது கடல் அல்ல, ஓர் ஏரி தான். ஜோர்தான் நதியின் ஒரு பகுதி தான் சவக்கடல். சாக் கடல் என்னும் நீர்நிலையானது மேற்குக் கரை, இஸ்ரேல், ஜோர்தான் ஆகியவற்றின் எல்லையிலும், பெரும்பிளவுப் பள்ளத்தாக்கின் ஜோர்தானிய பகுதியில் அமைந்துள்ளது. 67 கி.மீ. நீளமும், 18 கி.மீ. அகலமும் கொண்டது சவக்கடல். கடல் மட்டத்தில் இருந்து 1,237 அடி ஆழம் உடையது.உப்புக்கடல், சோதோம் கடல், நாறுகின்ற கடல், பேய்க்கடல் என பிற பெயர்களும் உண்டு.அதிகளவு உவர்ப்புத்தன்மையுடைய நீரில் மீன்களோ தாவரங்களோ வாழ முடியாது இருப்பினும் மிகச் சிறியளவில் நுண்ணுயிரிகள் மட்டும் வாழ்கின்றன.