Watch : விநாயகர் சதுர்த்தி - உச்சிப்பிள்ளையாருக்கு 150 கிலோவில் கொழுக்கட்டை படையல்!

Aug 31, 2022, 4:20 PM IST

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி பெருவிழா விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, திருச்சியில் புகழ்பெற்ற மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோவிலில் 150 கிலோ எடை கொண்ட பிரம்மாண்ட கொழுக்கட்டையை படையலிட்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. திரளான பக்தர்கள் கலந்துகொண்டு பிள்ளையாரை வழிபட்டனர்.