திண்டுக்கல்லில் வேண்டுதலை நிறைவேற்ற குழந்தைகளை ஏலம் விடும் வினோத திருவிழா !

Published : Aug 05, 2025, 08:02 PM IST

திண்டுக்கல் மலைக்கோட்டை பின்புறம் உள்ள முத்தழகுப்பட்டியில் 350 வருடங்கள் பழமையான புனித செபஸ்தியார் ஆலயம் உள்ளது. இங்கு ஒவ்வொரு வருடமும் ஆடி மாதத்தில் 4நாள் திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். இந்த வருடம் கடந்த 03ஆம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா துவங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான அன்னதானம் நிகழ்ச்சியில் இன்று இரவு நடைபெறுகிறது. நாளை பகல் சப்பறத்துடன் திருவிழா நிறைவடைகிறது. இன்று (05.08.25) காலை முதல் கிறிஸ்தவர்கள் இந்துக்கள் இஸ்லாமியர்கள் என மும்மதத்தை சார்ந்தவர்கள் என ஆயிரக்கணக்கானோர் தேவாலயத்திற்கு வந்த வண்ணம் உள்ளனர்.இன்று புனித செபஸ்தியார் ஆலயத்தில் வேண்டுதல் வைக்கும் பக்தர்கள், தங்களது வேண்டுதலை செபஸ்தியார் நிவர்த்தி செய்து கொடுத்தமைக்காக அவருக்கு நன்றி செலுத்தி வருகின்றனர். மேலும் திருமணமாகி பல வருடங்களாக குழந்தை இல்லாமல் இருக்கக்கூடிய தம்பதியினர் செபஸ்தியாரிடம் வேண்டுதல் வைத்து குழந்தை பெற்றவுடன் குழந்தையை கோவிலுக்கு கொண்டு வந்து கோவில் நிர்வாகிகளிடம் ஒப்படைத்து. அதன் பின் கோவில் வளாகத்தில் ஏலம் விட்டு அவர்களே எடுத்துச் சொல்கின்றனர். குழந்தைகளை ஏலம் விட்டு அவர்களை எடுத்துச் செல்லும் வினோத திருவிழா இங்கு சிறப்பாக நடைபெற்று வருகிறது.

06:06ஜனநாயக விழுமியங்களையும் ஆளுநர் அவர்கள் முறையாகக் காப்பார் என்று நான் முழுமையாக நம்புகிறேன்
03:39தமிழிசையுடன் சாதாரணமாக பேசினோம், அவரும் ஒரு நிகழ்ச்சிக்கு இங்கு வந்துள்ளார்கள் - கனிமொழி பேட்டி.
04:55பெண்கள் மாநாடு நடத்தும் அரசு கடன் சுமையை மக்களின் தலைமேல் ஏற்றுவது திராவிட மாடல் ஆட்சி
05:00தவெக இயக்கம் மதம், மொழிகளுக்கு அப்பாற்பட்ட இயக்கம் ! தவெக செங்கோட்டையன் பேட்டி
02:39மதவெறி பிடித்தவர்களின் பாட்ஷா இங்கு பலிக்காது எங்கள் பாஷாதான் பலிக்கும் ! ஏ.வா. வேலு பேச்சு
04:42விஜய்யை முதல்வராக ஏற்றுக் கொள்ளுபவர்களுடன் மட்டும்தான் கூட்டணி ! TVK செங்கோட்டையன் பேட்டி
03:32மைதா, ஆல்கஹால் இல்லாத தினை ப்ளம் கேக் | தேன் & நாட்டு சர்க்கரையின் சுவையில்|healthy recipe
05:09அந்த கூட்டணி ஒவ்வாத கூட்டணி, 100 சதவீதம் தேர்தலில் வெற்றியை இழக்கும் - அமைச்சர் ஐ பெரியசாமி பேச்சு
04:58பிளம் கேக் யார் சாப்பிடுவது என தி.மு.க - த.வெ.க - வுக்கு போட்டி ! அண்ணாமலை அதிரடி பேட்டி
02:35மலேசியாவில் நடைபெறும் ஜனநாயகன் பட இசை வெளியீட்டு விழாவிற்காக புறப்பாட்டார் விஜய்