Air India Express : இன்று திருச்சியில் இருந்து சார்ஜா புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் இயந்திர கோளாறு காரணமாக சுமார் 2 மணி நேரம் தரையிறங்க முடியாமல் தவித்தது.

இன்று மாலை சுமார் 5.40 மணியளவில் திருச்சி விமான நிலையத்திலிருந்து சார்ஜாவிற்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ஒன்று புறப்பட்டுள்ளது. அந்த விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விமானி அந்த விமானத்தில் இருந்த இயந்திர கோளாறு குறித்து கண்டுபிடித்த நிலையில், திருச்சிக்கு அந்த விமானத்தை திருப்பியுள்ளார். 

இருப்பினும் உடனடியாக பயணிகளோடு அந்த விமானத்தை தர இயக்கினால் அசம்பாவிதம் ஏதும் ஏற்படுமோ என்று எண்ணி, சுமார் 2 மணி நேரம் அந்த விமானத்தில் இருக்கும் எரிபொருள் தீரும் வரை வானில் வட்டமிட்டு சுமார் 8.40 மணியளவில் திருச்சி விமான நிலையத்தில் 144 பயணிகளுடன் பத்திரமாக விமானத்தை தரை இறக்கினார். இப்போது அந்த பயணிகள் அனைவரும் நலத்துடன் இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. விமான ஓடுதளத்தில் அந்த பிளைட் இறங்கிய பொழுது அருகில் இருந்த விமான நிலைய ஊழியர்கள் சந்தோஷத்தில் கூச்சலிட்ட காட்சிகள் தற்பொழுது வைரலாகி வருகிறது.

02:35மலேசியாவில் நடைபெறும் ஜனநாயகன் பட இசை வெளியீட்டு விழாவிற்காக புறப்பாட்டார் விஜய்
06:28விஜயும், சீமானும் ஆர்எஸ்எஸ்ஸின் பிள்ளைகள் என்ற திருமாவளவன் கருத்துக்கு குஷ்பு பதில்
03:24அந்த முட்டாளுக்கு தான் சொல்லுறேன் திமுக ஆட்சிக்கு வந்து செஞ்ச முதல் ஊழல் இதுதான் - ஹெச்.ராஜா பேட்டி
02:41மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் கண்டறியும் போலிசார் தீவிர சோதனை மேற்கொண்டனர்
03:41பைக்கில் வந்த இளைஞர் செய்த செயல் கழுத்தைப் பிடித்து தள்ளிய நாம் தமிழர் கட்சியினர் பரபரப்பு.
06:45குரங்கு கிடைத்த பூமாலை அதிமுக இல்லை, விமர்சனங்கள் கடுமையாக உள்ளபோது நான் விமர்சிப்பேன் - ஜெயக்குமார்
05:00பள்ளி விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகளை நடத்தக்கூடாது - அமைச்சர் அன்பில் மகேஷ் எச்சரிக்கை
03:16மக்களுடைய தேவைகள் என்ன என்பதை கேட்டு ...அதை வாக்குறுதியாக கொடுப்போம் ! MP கனிமொழி பேட்டி
03:49தேர்தல் நேரத்தில் வாக்குகளுக்காக பலர் காசு பணத்தை கொடுப்பார்கள் ! நயினார் நாகேந்திரன் பேச்சு
06:41நான் 2026 ல் போட்டியிட மாட்டேனா ? விஜய்யை நிற்க வைத்து கேளுங்கள் - சரத்குமார் பேட்டி