
இந்த கோவிலில் மர்ம நபர்கள் புகுந்து கோவில் பூட்டை உடைத்து உள்ளே சென்று கோவில் கருவறையில் இருந்த ஒன்றரை அடி உயரம் கொண்ட செல்வ காளியம்மன் வெண்கல சிலை மற்றும் கோவில் பீரோவில் இருந்த ஒரு கிராம் தங்கதாலி மற்றும் பூஜை பொருட்களை மர்மநபர்கள் திருடிச் சென்று விட்டனர். அந்த வழியாக சென்ற பொதுமக்கள் கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து உடனடியாக கபிஸ்தலம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.