Oct 1, 2022, 11:53 AM IST
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள நாலாங்கட்டளை கிராமத்தில் தீர்த்தாரபுரம் செல்லும் சாலையில் இயங்கி வரும் அரசு மதுபான கடையில் மது பிரியர் ஒருவர் ரூபாய் 600 மொத்தமாக கொடுத்து மது வாங்கியுள்ளார். அதில் ரூபாய் 590 போக மீதி பத்து ரூபாய் சில்லறை கேட்டுள்ளார். அப்போது கடையின் விற்பனையாளரான செல்வம் மது வாங்கியதற்கு மொத்த ரூபாயும் சரியாகிவிட்டது. மீதி சில்லறை இல்லை என்று கூறியுள்ளார்.
இதற்கு மது பிரியர் மது வாங்கியதற்கான கணக்குகளை திரும்ப அவரிடம் சொல்லி மீதி பத்து ரூபாய் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கடை விற்பனையாளர் செல்வம் மதுக்கடையின் உள்ளிருந்து கதவை திறந்து கொண்டு வெளியில் வந்து மது பிரியரை ஆபாச வார்த்தைகளால் திட்டியதோடு தாக்கவும் முற்பட்டார். இதனை அருகில் இருந்த மற்றொரு நபர் தனது செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.