vuukle one pixel image

கோரிக்கைகளை வலியுறுத்தி கருப்பு பட்டைய அணிந்து விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்கள் போராட்டம் !

Velmurugan s  | Published: Apr 8, 2025, 4:00 PM IST

இன்று விடைத்தாள் திருத்தும் பணி தமிழகம் முழுவதும் நடைபெறுகிறது. விடைத்தாள் திருத்தும் முகாம்களில் ஆசிரியர்கள் கருப்பு பட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக கரூர் மாவட்டம், மணவாடி பகுதியில் செயல்படும் தனியார் பள்ளியில் விடைத்தாள் திருத்தும் பணிக்கு வந்த முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் கருப்பு பட்டையை அணிந்து விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டனர்.