தமிழ்நாடு பெரியார் புராணம் அல்ல, பெரிய புராணம் தான்..தமிழகத்தில் பெரிய புராணம், ஆன்மீகத் தமிழ், காவி தமிழ் தான்., இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடத்தில் சுகாதாரத்துறை., அப்படி என்றால் தமிழக முதல்வர் அரசு ஏன் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கவில்லை. திமுக-வினர் வீடு, வீடாக பாஜக நிதி கொடுக்கவில்லை என்று கூறுகிறார்கள். திமுக நான்கு வருடத்திற்கு முன்னர் செய்ய முடியாததை 45 நாட்களில் ஓரினில் தமிழ்நாடு என்று எப்படி செய்ய முடியும்? ஏற்கனவே பெட்டிக்குள் பல மனுக்கள் தூங்கிக்கொண்டு இருக்கும்போது எந்த பெட்டிக்குள் இந்த மனு தூங்கப் போவது என்று தெரியாது. ஆகவே அன்றன்றைக்கு மக்கள் திட்டங்களை தீர்வு கண்டு இருந்தால் இன்று மக்களோடு ஸ்டாலின் என்று போய் நிற்க வேண்டிய அவசியம் இல்லை. ஆகவே, தமிழக அரசாங்கம் மக்களை ஏமாற்றி வருகிறது. என்று முன்னாள் கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் தூத்துக்குடி விமான நிலையத்தில் பேட்டி.!