காஷ்மீரின் பஹல்காம் பள்ளத்தாக்கில் ஏப்ரல் 22ஆம் தேதி தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு, ஆபரேஷன் சிந்தூர் மூலமாக இந்தியா பதிலடி நடத்தியது. இதன்பின் இரு நாடுகளுக்கு இடையிலும் மோதல் நடந்து வந்த நிலையில், பின்னர் பாகிஸ்தான் கேட்டுக்கொண்டதன் பேரில் மோதல் முடிவுக்கு வந்தது. இந்த நிலையில் கடந்த வாரம் நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத் தொடர் தொடங்கியது.