
தமிழகத்தில் தொடர் கொலைகள் மற்றும் குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருவதாக எதிர்கட்சிகள் குற்றம்சாட்டி வருகிறது. இந்த நிலையில் ஈரோட்டில் வயதான தம்பதியை கொலை செய்து நகையை கொள்ளையடித்து செல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து தமிழக பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கடும் விமர்சனம் செய்துள்ளார்.