சென்னையில் திமுக துணைப்பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. செய்தியாளர் சந்திப்பில் அண்ணா, ஜெயலலிதாவை தரக்குறைவாக பேசியவரோடு கூட்டணியை அமைத்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. பாஜகவுடன் கூட்டணி வைத்து அதிமுகவுக்கு எடப்பாடி பழனிசாமி துரோகம் செய்துள்ளார். பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறியிருந்தார். அவர்கள் பிரிந்துவிட்டதாக சொன்னாலும் கூட்டணி தொடரும் என்பதை சுட்டிக்காட்டினர்.பாஜகவுடன் கூட்டணியை அறிவிக்கும் நிர்பந்தத்திற்கு அதிமுகவினர் ஆளாக்கப்பட்டுள்ளனர் என்று கூறினார்.