Watch : காஞ்சிபுரம் 40 ஊராட்சிகளில் வீடுகள் தோறும் ஏற்றப்பட்ட தேசிய கொடிகள் -கழுகுபார்வை காட்சி!

Watch : காஞ்சிபுரம் 40 ஊராட்சிகளில் வீடுகள் தோறும் ஏற்றப்பட்ட தேசிய கொடிகள் -கழுகுபார்வை காட்சி!

Published : Aug 14, 2022, 08:41 AM IST

காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்க்குட்பட்ட கீழ்கதிர்பூர்,திருப்பருத்திக்குண்றம்,கீழம்பி,திம்மசமுத்திரம், முசரவாக்கம் உள்ளிட்ட 40 ஊராட்சிகளில் உள்ள அனைத்து பகுதிகளிலும் உள்ள ஒவ்வொரு வீடுகளிலும்,கடைகள்,வணிக வளாகங்கள் ஆகிய இடங்களில் தேசப்பக்தியை வெளிபடுத்தும் வகையில் மூவர்ணக் கொடி பறக்கவிடப்பட்டது.

வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் தேதி 75வது சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஒவ்வொரு வீடுகளிலும் மூவர்ண தேசிய கொடியை ஏற்றி தேசபற்றை வெளிப்படுத்தவேண்டும் என ஒன்றிய, மாநில அரசு தெரிவித்தது. ஆகஸ்ட் 13முதல் 15ஆம் தேதி வரை மூன்று நாட்கள் தேசிய கொடி ஒவ்வொரு வீடுகளிலும் பறக்க விட உள்ளாட்சி நிர்வாகம் சார்பில் ஏற்பாடும் செய்யப்பட்டது.

இதன் ஒரு பகுதியாக காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்க்குட்பட்ட கீழ்கதிர்பூர்,திருப்பருத்திக்குண்றம்,கீழம்பி,திம்மசமுத்திரம், முசரவாக்கம் உள்ளிட்ட 40 ஊராட்சிகளில் உள்ள அனைத்து பகுதிகளிலும் உள்ள ஒவ்வொரு வீடுகளிலும்,கடைகள்,வணிக வளாகங்கள் ஆகிய இடங்களில் தேசப்பக்தியை வெளிபடுத்தும் வகையில் மூவர்ணக் கொடி பறக்கவிடப்பட்டது.

வீடுகள் தோறும் பறக்க விடப்பட்ட கொடிகளை காஞ்சிபுரம் ஒன்றியக்குழு பெருந்தலைவர் மலர்கொடி குமார் பார்வையிட்டு ஊக்கப்படுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதுகுறித்து அவர் கூறுகையில், காஞ்சிபுரம் ஒன்றியத்திற்க்குட்பட்ட 40 ஊராட்சியில் 32,802கொடிகள் வழங்கப்பட்டு அதனை அனைத்து ஊராட்சிகளிலும் ஏற்றப்பட்டுள்ளது என தெரிவித்தார். இந்நிகழ்வில் ஒன்றிய செயலாளர் பி.எம்.குமார்,உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
 

04:32தற்போதைய அரசியல் நிகழ்வுகள் குறித்து கார்த்தி சிதம்பரம் பேச்சு: மதுரையில் பத்திரிகையாளர் சந்திப்பு!
04:04தூத்துக்குடி : விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தீவிரமாக நடைபெறும் விநாயகர் சிலை தயாரிப்பு பணிகள்!
05:20எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கான அடிப்படை வசதிகள்! காங்கிரஸ் MP ஜோதிமணி ஓபன் டாக்!
08:12காவிரி மற்றும் மேகதாது விவகாரம்: திருச்சியில் ஆர்.காமராஜ் தலைமையில் அதிமுக போராட்டம்!
04:37தலைவர் விஜய் கூறிய அறிவுரை! X தள பதிவுகள் குறித்து லயோலா மணி ஓபன் டாக்!
09:28தமிழக வெற்றி கழகம் முற்றிலும் ஏழைகளுக்கான கட்சி ..! தொழிலாளர் சங்க மாநாட்டில் அமைச்சர் என். ஆனந்த்
09:52“Comeback கொடுப்பதில் நாம் Specialist” – திமுக செயற்குழுவில் மு.க.ஸ்டாலின் அதிரடி உரை!
02:21சட்டப்பேரவையில் நீக்கப்பட்ட நிகழ்வுகளை 'ரீல்ஸ்' ஆக வெளியிட்டால் நடவடிக்கை! பேரவைத் தலைவர் எச்சரிக்கை
03:35திமுக செயற்குழு கூட்டம்: முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் தொடக்கம்!
04:28தமிழக அரசுக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்: மாநில செயலாளர் பெ.சண்முகம் தலைமை