
நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழக முதல்வர் கலந்துகொண்டது தொடர்பாக சிலர் புரிதல் இல்லாமல் பேசுகிறார்கள். மத்திய அரசு நடப்பு நிதியாண்டில் தமிழகத்துக்கு எந்த நிதியும் ஒதுக்காமல் முழுமையாக புறக்கணித்து உள்ளது. தேசியக் கல்விக் கொள்கையை ஏற்றுக்கொண்டால்தான் கல்வி நிதி ஒதுக்கப்படும் என கூறுவது சர்வாதிகாரம். மத்திய அரசு அனைத்து மாநிலங்களையும் அரவணைத்து ஆட்சி செய்ய வேண்டும். பாஜகவுக்கும் அதிமுகவுக்கும் வரும் தேர்தலில் தமிழக மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள் . இண்டியா கூட்டணியை எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது. இது தமிழக மக்களுக்கான கூட்டணி. தமிழகத்தை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்லும் கூட்டணி. தமிழகத்தை கடந்து தேசத்தை பாதுகாக்கும் கூட்டணி. இந்த கூட்டணி உடையும் என யாரும் பகல் கனவு காண வேண்டாம். மத்திய அரசு மக்களுக்கான அரசு இல்லை....மக்களை ஏமாற்றுகிறது என்று செல்வப்பெருந்தகை பேட்டியில் பேசியுள்ளார் .