மூன்று நாள் தொடர் விடுமுறை.. மகிழ்ச்சியில் பள்ளி மாணவர்கள் - இந்த லீவு எதற்காக தெரியுமா?

Ansgar R |  
Published : Sep 10, 2024, 11:49 PM IST

School Leave for 3 Days : இமானுவேல் சேகரன் நினைவுநாளையொட்டி பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

வருடம் தோறும் செப்டம்பர் மாதம் 11-ம் தேதி சுதந்திர போராட்ட வீரர் இமானுவேல் சேகரனின் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. மேலும் இந்த நிகழ்வானது குருபூஜையாக கொண்டாடப்படும் நிலையில், அதில் கலந்து கொள்வதற்காக தமிழகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான மக்களும், முக்கிய அரசியல் தலைவர்களும் ராமநாதபுரம் செல்வது வழக்கம். 

இந்நிலையில் இதனால் ஏற்படும் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த, பல்வேறு மாவட்டங்களில் இருந்து போலீசார் அதிக அளவில் இராமநாதபுரம் மாவட்டத்தில் குவிக்கப்படுவார்கள். அப்படி ராமநாதபுரத்திற்கு வரும் போலீசார் அனைவரும், அங்குள்ள பள்ளிகளில் தான் தங்க வைக்கப்படுவார்கள். குறிப்பாக ராமநாதபுரம் மற்றும் பரமக்குடியை சுற்றியுள்ள பகுதிகளில் இருக்கும் பள்ளிகளில் போலீசார் தங்க வைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் தங்கி இருக்கும் சுமார் 82 பள்ளிகளுக்கு மட்டும் கடந்த செப்டம்பர் 9ம் தேதி முதல் நாளை செப்டம்பர் 11ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டிருக்கிறது. 

இந்த 82 பள்ளிகளுக்கு மட்டுமே இந்த விடுமுறை பொருந்தும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

07:34மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த எல்.முருகனுக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!
08:10முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளைத் தொடங்கி வைத்த அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் !
05:22தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறி: மதுரையில் பிரேமலதா விஜயகாந்த் பரபரப்பு பேட்டி
03:33மாவட்ட விளையாட்டு அரங்கில் நவீன உடற்பயிற்சி கூடம் திறப்பு : விளையாட்டு வீரர்களுடன் ஆதவ் அர்ஜுனா !
08:35ஒரே தேசம் ஒரே ஆட்சி மாநில அரசுகளே கூடாது என்பதுதான் அவர்களின் திட்டம் ! திருமாவளவன் அதிரடி
03:16தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யை பார்க்கணும் ! - கேரளாவில் நவராத்திரி விழாவுக்கு வரும் மக்கள் கருத்து !
06:10மாற்றுத்திறனாளிகள் தின விழா : காட்பாடியில் நலத்திட்ட உதவிகள் மற்றும் பரிசுகளை வழங்கிய விஜய் பாலாஜி!
08:19அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு குறித்து சென்னையில் அமைச்சர் வெங்கடரமணன் விளக்கம் !
04:02மாகரல், ஆர்பாக்கம் கிராமங்களில் தொடர் மழை: காஞ்சிபுரத்தில் குளிர்ந்த வானிலை !
03:39திருவண்ணாமலையில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு: ஒரே நாளில் 1.5 லட்சம் பனை விதைகள் நடும் இயக்கம் !