வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்ய வாய்ப்புள்ளது. குறிப்பாக விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று இரவு கனமழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது . தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு பகுதிகளில் வெயில் வாட்டி வதைத்து வந்தது. குறிப்பாக மதுரை உள்ளிட்ட பகுதிகளில் 100 டிகிரியை தாண்டி வெயில் சுட்டெரித்தது. இதனால் பொதுமக்கள் பகல் நேரங்களில் வௌியில் செல்வதற்கு அஞ்சு நடுங்கினர். இந்நிலையில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதேபோல் தென் இந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.