
நேற்று மதுரையில் நடைபெற்ற தமிழ்நாடு உணவு வியாபாரிகள் சங்கம் 80 ஆவது ஆண்டு விழாவில் பங்கேற்பதற்காக மதுரை வருகை தந்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். மதுரையில் உள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்தார். இந்த நிலையில் இன்று காலை மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சாமி தரிசனம் செய்வதற்காக வருகை தந்தார். அரை மணி நேரம் சாமி தரிசனம் செய்த நிர்மலா சீதாராமன் மீண்டும் விடுதிக்கு புறப்பட்டுச் சென்றார்.