Velmurugan s | Published: Mar 14, 2025, 5:01 PM IST
தமிழக சட்டசபையில் 2025-2026-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த நிலையில், தமிழக பட்ஜெட் குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது: 2026 தேர்தலில் வாக்குகளை பெறுவதற்காக அறிவிப்புகளை வெளியிட்டுள்ளனர். தமிழ்நாடு கடனில் தத்தளிக்கிறது; ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட திட்டங்களுக்கு நிதி இல்லை நடைமுறையில் பல திட்டங்களுக்கே கடன் வாங்கித்தான் திட்டத்தை செயல்படுத்த வேண்டிய நிலை உள்ளது. நிர்வாகத் திறமையற்ற அரசு நடக்கிறது என்பதே எதார்த்த உண்மை.அதிக கடன் வாங்குவதில் முதல் மாநிலமாக தமிழகம் இருக்கும் நிலையில் எப்படி புதிய திட்டங்களை செயல்படுத்துவார்கள்?. பட்ஜெட் அறிவிப்பு, வெறும் வெற்று அறிவிப்பாகத்தான் உள்ளது. இது ஒரு விளம்பர பட்ஜெட். இவ்வாறு அவர் கூறினார். tnbudget2025