த.வெ.க ஒன்றிய செயலாளரை கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என மண் சோறு சாப்பிட்ட த.வெ.க நிர்வாகி !

Published : Aug 07, 2025, 09:02 PM IST

சென்னை பூந்தமல்லியை அடுத்த நசரத் பேட்டையில் வசித்து வருபவர் வெற்றிவேல் ,த.வெ.க நிர்வாகியான இவர் த.வெ.க திருவள்ளூர் தெற்கு மாவட்ட பூந்தமல்லி முன்னாள் ஒன்றிய செயலாளர் ஜெகன் அப்பு என்பவரை கட்சியிலிருந்து நீக்க வேண்டும் எனவும் அப்படி நடந்தால் அம்மனுக்கு மண் சோறு சாப்பிடுவதாகவும் கடந்தாண்டு ஆடி 22 ஆம் தேதி வேண்டுதல் வைத்துள்ளார். இந்நிலையில் கடந்த மாதம் அடி தடி வழக்கில் சம்பந்தப்பட்டதாக கூறி த.வெ.க ஒன்றிய செயலாளர் ஜெகன் அப்புவை திருவள்ளூர் தெற்கு மாவட்ட செயலாளர் பிரகாசம் கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கி அறிக்கை வெளியிட்டார். இந்நிலையில் தன் வேண்டுதல் நிறைவேறியதால் ஆடி 22ஆம் தேதி ஆன இன்று பூந்தமல்லியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற பனையாத்தம்மன் ஆலயத்தில் வெற்றிவேல் மண் சோறு சாப்பிட்டு நேர்த்தி கடன் நிறைவேற்றினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வெற்றிவேல் "த.வெ.க முன்னாள் ஒன்றிய செயலாளர் ஜெகன் அப்பு என்பவரை கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என அம்மனுக்கு வேண்டுதல் வைத்ததாகவும், வேண்டுதல் நிறைவேறியதால் மண் சோறு சாப்பிட்டு நேர்த்திக்கடன் செலுத்தியதாகவும் தெரிவித்தார் . மேலும் தன் குடும்பத்தையே ஜெகன் அப்பு கெடுத்து விட்டதாகவும் கட்சிப் பதவிகளுக்கு பல நிர்வாகிகளிடம் பணம் பெற்று உள்ளதாகவும் குற்றம் சாட்டினார்.தொடர்ந்து பேசிய வெற்றிவேல் எதிர்காலத்தில் ஜெகன் அப்புவை கட்சியில் சேர்க்க கூடாது என த.வெ.க தலைவர் விஜய் மற்றும் த.வெ.க பொதுச் செயலாளர் ஆனந்த் ஆகியோர்களுக்கு கோரிக்கை வைத்தார்

04:11காங்கிரஸ் கூட்டணியில் இல்லாமல் திமுகவினால் 25 இடங்கல் கூட வெற்றிபெற முடியாது ! நிர்மல் குமார் பேட்டி
03:44உதயநிதி ஸ்டாலினை முதலமைச்சராக்க வேண்டும் என்பதற்காகவே திமுக இந்தத் தேர்தலைச் சந்திக்கிறது
04:59முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் முன்னிலையில் அதிமுகவில் இணைந்த தமிழக வெற்றி கழகத்தினர்
03:26ரயில்களில் வனவிலங்குகள் அடிபடாமல் இருப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது - ராஜ கண்ணப்பன்
05:27ஜெயலலிதா எம்ஜிஆர் ஆட்சி மீண்டும் தமிழகத்தில் வரும் - மத்திய அமைச்சர் பீயூஷ் கோயல் பேட்டி
04:33சார் சும்மா மாத்தி மாத்தி பேசாதீங்க.. த.வெ.கவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை? டென்ஷனான செல்வப்பெருந்தகை
05:10ஒபிஎஸ் தி.மு.க. கூட்டணியில் இணைந்து இருப்பதால் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எந்த பாதிப்பும் இருக்காது
04:11ஓபிஎஸ் திமுகவில் இணைந்தது கூடுதல் வலிமை சேர்ந்திருப்பதாக வரவேற்று மகிழ்கிறோம் ! திருமாவளவன் பேட்டி
04:28காங்கிரஸ் உடனான சட்டமன்றத் தேர்தல் குறித்து தலைமை அறிவிக்கும் - முத்துசாமி பேட்டி
05:49தமிழக அரசியலில் இதுவரை இல்லாத திருப்பம் திமுகவில் இணைந்தார் ஓபிஎஸ்.. EPS-க்கு அதிர்ச்சி